நாற்றங்கால் தயாரிப்பு
நிலத்தை நன்றாக உழவு செய்து பிறகு 2 மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் மற்றும் 15 முதல் 20 சென்டி மீட்டர் உயரமுள்ள நாற்றங்கால் பாத்தியை அமைத்துக் கொள்ளவேண்டும் .நாற்றங்காலில் விதைகளை விதைத்து மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் .பிறகு வாரம் இரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
நிலம் தயாரித்தல்
சாகுபடி செய்ய தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது ஒரு எக்டருக்கு 15 டன் தொழுவுரம் இட்டு பார்கள் அமைத்து கொள்ள வேண்டும்.
விதைத்தல்
15 முதல் 20 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை தயார் செய்துள்ளார் பார்களின் பக்கவாட்டில் இடவேண்டும். வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு நடவேண்டும்.