தேவையான பொருட்கள்
grow bags அல்லது தொட்டி
அடியுரமாக இட மணல்வேண்டும். தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் ,செம்மன், பஞ்சகாவியம்.
விதைகள்
பூவாளி தெளிப்பான்
தேர்வு செய்தாதொட்டி அல்லது பையலே அடியுரமாக ஒரு பங்கு மண்,ஒரு பங்கு மணல் ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றைக் கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
கீரைகள் வளர்ப்பதற்கான வழிகளில் பை களின் நிரப்பும்போது அரையடி ஆழத்திற்கு மேல் நிரப்பினால் போதுமானது.
விதைத்தல்
விதைகளை மணல் கொண்டு கலந்து பயிர்களில் தூவி கிளறி விட வேண்டும். விதைகள்அளவில் சிறியதாக இருப்பதால் மணல் கொண்டு விதையை சீரமைக்க வேண்டும் .பிறகு இந்த கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல அமைக்க வேண்டும். விதைகளின் மீது செய்தித்தாள்களை கொண்டு மூடிவிடவேண்டும். விதைகள் முளைத்தவுடன் செய்தி தாள்களைநீக்கிவிட வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பிறகு தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தென்னை நார் கழிவு,அடியுரமாக போட்டிருந்தால் ஈரப்பதத்தை கண்காணிப்பு தண்ணீரூற்று வேண்டும்.ஏனெனில் அதிக ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் பூஞ்சாண நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.
உரங்கள்
சமையலறைகழிவுகளை மக்க செய்து உரமாக போடலாம் .மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பஞ்சகாவியம் 10 மில்லியன் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
அதிக வெயில் படுவதால் கீரைகள் வாடி விடும் இதை ஈடுகட்ட கீரை பகுதியை சுற்றிலும் வளை அமைக்கலாம்= அல்லது= சிறிதுநிலவு நிழல்விழும் இடத்தில் மாற்றி வைக்கலாம்.
அறுவடை
கீரைகளை முற்றி விடாமல் இளம் தளிர் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக 25 முதல் 30 நாட்களில் அறுவடை செய்யலாம்.