பருவம்
சித்திரை ஆடி மார்கழி மாதங்கள் ஏற்றவை.
நல்ல மண்ணும் மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்ட இ ரு மண் பாட்டு செம்மண் நிலம் உகந்தது அதிககளிமண்கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும்.
விதை அளவு
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் கலந்து பரவலாகக் கொட்டி உறுதி செய்தும் இன்னும் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவுகளில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
கீரை விதைகளை மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். அப்பொழுதுதான் விதைகள் சீராக விழுந்து முளைக்கும் பிறகு கையால் கிலாரி பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகள் விதைத்த உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளி நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்
உரங்கள்
ஜீவாமிர்தக் கரைசல்7 நாட்கள் இடைவெளியில் 2 முறை நீர் பாசன நீரில் கலந்துவிட வேண்டும் .இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
பயன்கள்
இந்தக் கீரையில் இரும்புச்சத்து கால்சியம் விட்டமின் c,bநார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது.
குடல் புண் அல்சர் உள்ளவர்கள் இந்தக்கீரையைகடைந்தது அல்லதுவதக்கிய உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது
பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு இந்த கீரை மிகவும் நல்ல உள்ளது நல்லது.
இது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது . மூல நோய்உள்ளவர்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.