பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள் 

பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள்

மற்ற உணவுகளைப் போல் கீரை உணவு கிடையாது. மற்றவற்றில் இல்லாத கிடைக்காத பல நல்ல விசயங்கள் கீரைகளில் உள்ளன. அவற்றை முழுமையாகக் கிடைக்க தட்பவெப்பநிலைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இளவேனில்– அரைக்கீரை,புளிச்சக்கீரை தவிர்த்தல்.

முதுவேனில் – அரைக்கீரை, முள்ளங்கிக்கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை பருப்புக்கீரை போன்றவற்றைத் தவிர்து மற்றதை சேர்த்தல் வேண்டும்.

கார்காலம் – சிறுகீரை பருப்புக்கீரை வெந்தயக்கீரை  முள்ளங்கிக்கீரை பிண்ணாக்குக்கீரை மூக்கிரட்டைக்கீரை துத்திக்கீரை பசலைக்கீரை போன்றவை தவிர்த்தல்.

கூதிர் காலம் -அகத்திக்கீரை ஆரைக்கீரை  கானாம் வாழைக்கீரை சிறுகீரை பருப்புக்கீரை பிண்ணாக்குக்கீரை பண்ணைக்கீரை தண்டுக்கீரை பொடுதலைக்கீரை முள்ளங்கிக்கீரை மூக்கிரட்டைக்கீரை தவிர்த்தல்.

முன்பனிக்காலம் – அகத்திக்கீரை சிறுகீரை பசலைக்கீரை மூக்கிரட்டைக்கீரை தவிர்த்தல்.

பின்பனிக் காலம் – சிறுகீரை பருப்புக்கீரை பாலக்கீரை மூக்கிரட்டை பசலைக்கீரை தவிர்த்தல்.

எல்லா நாள்களிலும் சாப்பிடக்கூடியவை – பொன்னாங்கண்ணி முருங்கை மணத்தக்காளி கரிசலாங்கண்ணி கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி.  எப்படி வேண்டுமானாலும் இவற்றைச் சாப்பிடலாம். பொதுவாக கீரைகள் அனைத்துமே மருத்துவ குணமிக்கவை.
பண்ணைக்கீரை தொய்யக்கீரை இரண்டும் வேறு வேறு கீரைகள்.
பண்ணை  கீரை   என்பது   களை   என்றே  கூறுகிறேனன்.
மேலும் தொய்யக்கீரை நல்ல வேர்முடிச்சுக்கள் உள்ளது.

முருங்கையை பிரம்ம விருட்சம் என போற்றுகின்றோம், இதை நாம் சமைத்து சத்துக்களை வீனாக்கிவிடுகிறோம்,

வெந்த முருங்கை மருந்துக்கு உதவாது!
வெந்து கெட்டது முருங்கை!

இதை கறிவேப்பிலை பொடிபோல் அரைத்து உபயோகப் படுத்தலாம் என்று நாமக்கல்லை சார்ந்த விவசாயி தேன்மொழி கூறுகிறார் :

2 படி அரிசி பிடிக்கும் பாத்திரம் அளவு உருவிய முருங்கை கீரை. அலசி நிழலில் காயவைத்து அதனுடன் மிளகு 50கிராம், ஊளுந்து 50கிராம், 50கிராம் கடலைப்பருப்பு, இந்துப்பு அரை டீஸ்பூன்,சிறிது பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்தது இந்தப் பொடி.

100 கிராம் மமுருங்கையில் உள்ள சத்துகள்:

நீர்ச்சத்து – 76%
புரதம்        -6.5%
கொழுப்பு -1.5
தாது           -2.2
நார்ச்சத்து-1
மாவு            -12.5
கால்சியம் -435மி.கி
பாஸ்பரஸ் -70 மி.கி
இரும்பு       -7மி.கி
வைட்டமின்C-220 மி.கி
பி.காம்ப்ளக்ஸ் – சிறிதளவு.
கலோரி – 92

கீரைகளின் அரசி முருங்கை ,  காயவைத்துப் பொடி செய்து டீ தூளுக்கு மாற்றாக முருங்கை டீ பருகலாம். பொடி கிலோ 2000 ரூ வரை விற்கிறதாம்.

  • உண்மையை உரக்கச் சொல்ல விழைகிறேன். சாதாரண தள்ளுவண்டியில் பழைய இரும்புக்கும் தகரத்திற்கும் விற்கப்பட்ட ஒரு சில சத்து கொண்ட பேரீச்சை  இன்று எட்டாக்கனியாய் உயிர்காக்கும் மருந்தென உச்சாணிக்கொம்பில்… அனைத்து சத்துக்களும் கொண்ட நம்மரபுணவு கீரை வகைகள் அன்று முதல் இன்று வரை அதே பிளாட்பாரங்களில் ஐந்திற்கும் பத்திற்கும் அல்லாடி. இந்நிலை மாற்றப்பட  உயர் உயிர்நாடிக்குழுவினர் பங்களிப்பாய் கீரை பயிரிடுவார்கள் என்று நம்பிகை விதைக்கிறார் எழில் உழத்தி அவர்கள், மேலும் அவர்கள் தெளிப்பான் மூலம்  காலை, மாலை – ½  மணி நேரம் பாத்தி நனைய ஆன நேரம் – காய்தலும் பாய்தலுமாய் –  காலை நீர் விட்ட பின் அறுவடை செய்கிறார்களாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories