பாலக் கீரையின் இலைகள் அடர் பச்சை நிறமாக மாற என்ன உரம் கொடுக்கலாம்?

பஞ்சகவ்ய கரைசல் தெளிக்கலாம் அல்லது நீர்பாசனம் வழியாக கொடுக்கலாம்.

ஜீவாமிர்தத்தை நீர்ப்பாசனத்தில் கலந்துவிடலாம் இதன்மூலம் கீரையின் இலைகள் பச்சையாக இருக்கும் .

திசு வளர்ப்பு முறையில் வாழை கன்றுகளின் நன்மைகள் யாவை?

திசு வளர்ப்பு வாழை இலைகளில் நோயற்ற அதிக மகசூல் தரும் தாய் மரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் நச்சுக்களின் தாக்கம் இன்றி இருக்கும்.

அதோடு மண் வழியே பரவும் பூச்சி மற்றும் நோய் களால் ஆன வாடல் எர்வினிய அழுகல் நோய் மற்றும் நூற்புழுக்களின் தாக்குதல் இன்றி கன்றுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

தட்டை பயறு செடியில் இலை சுருட்டு புழு உள்ளது அதை எவ்வாறு செய்யலாம்?

இஞ்சி 1 கிலோ பூண்டு ஒரு கிலோ பச்சை மிளகாய் ஒரு கிலோ ஆகிய மூன்றையும் தனித்தனியாக விழுதாக அரைத்து பிறகு அதில் கலந்து கொள்ள வேண்டும்.

அதன்பின்பு 10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் விழு து என கலந்து செடிகளின் மீது தெளித்தால் இலைச் சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்தலாம்.

மாட்டிற்கு சினை ஊசி எப்பொழுது போடலாம்?

கன்று குட்டிகள் பிறந்த 30 மாதங்கள் கழித்து சினை ஊசி போடலாம்.

கன்று ஈன்ற மாடுகளுக்கு 40 முதல் 60 நாட்கள் கழித்து சினை ஊசி போடலாம்.

சிந்து இன மாட்டிற்கு மடி நோய் சரியாக இயற்க்கை முறை தீர்வு என்ன?

சோற்றுக்கற்றாழை -25o கிராம் மஞ்சள் பொடி 50 கிராம் சுண்ணாம்பு 15 கெட்டியாக அரைத்து பிறகு ஒரு கையளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் நடுப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும்.

தினமும் ஐந்து முறையாவது தொடரவேண்டும் பால் கரந்த பிறகு தடவவேண்டும்.

தினமும் புதிதாய் மருந்து தயாரிக்கப் படவேண்டும். மடி வீக்கமாக இருந்தால் வீக்கம் குறையும் வரை தடவ வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories