மண்
நல்ல மண்ணும் மணலும் கலந்த சற்று அமிலத் தன்மை கொண்ட ஈர மண் பாட்டு நிலம் செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது.
விதை அளவு
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்யவேண்டும் .ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பன்படுத்த வேண்டும் .பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதை விதைத்தல்
விதைகளை தயார் செய்துள்ள பார்களில் பக்கவாட்டில் ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.. பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.