பொன்னாங்கண்ணிக் கீரை

ரகங்கள்

சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகைகள் உள்ளன.

பருவம்

இது ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

மண்

நல்ல மண்ணும் மணலும் கலந்த சற்று அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம் செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது.
விதை அளவு
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்யவேண்டும் .எக்டருக்கு 5 டன் தொழுஉரம் கலந்து பரவலாக கொண்டு உழவு செய்து மண்ணை பயன்படுத்த வேண்டும்.

விதைத்தல்

விதைகள் சிறியதாகஇருப்பதால் விதைகளோடுமணல் கலந்து பாத்திகளில் தூவி விடவேண்டும். பிறகு கையால் கிளறி மெல்லிய போர்வை போல் அமைத்து பாசனம் செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகள் விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் .விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும் .பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories