மணத்தக்காளி எப்படி பயிரிடுவது?

மணத்தக்காளி எப்படி பயிரிடுவது?

பருவம்
அனைத்து பருவத்திலும் பயிர் செய்யலாம் டிசம்பர் மாதம் ஏற்ற பருவமாகும்.

மணல்

மணல் தவிர்த்து எல்லா வகை மண்ணிலும் வளரும்.

விதை அளவு

விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 100 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரிப்பு

நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைக்க வேண்டும். பழங்கள் இந்த விதைகளை சேகரித்து சாம்பலுடன் கலந்து பாத்திகளில் விதைகளை சீராக தூவ வேண்டும்.

நிலம் தயாரித்தல்

ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரத்துடன் எருவை மணலுடன் கலந்து பரவலாகக் கொட்டி செய்யவேண்டும். பிறகு அதில் தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

நடவு செய்தல்

கன்றுகள் 30 சென்டிமீட்டர் முதல் 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். செடிகள் மூன்று மாத இடைவெளியில் மொத்தம்1 20 சென்டிமீட்டர் வளர்ந்துவிடும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம் .மண்ணின் இருப்பதற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். பயிரில் பூ அரும்பும் வரை பாசனம் செய்ய வேண்டும். பாசனம்செய்யும்போது ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விடுவதால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.

உரங்கள்

ஒரு எக்டருக்கு தழைச்சத்து 25 கிலோ மணிச்சத்து 40 கிலோ மற்றும் சாம்பல் சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும் சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக அளிக்க வேண்டும். தழைச்சத்து மற்றும் மணிச்சத்து இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக பிரித்து அளிக்க வேண்டும்.

பயன்கள்

இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் வாய்புண் பால்வினை நோய்கள் உடல் உஷ்ணம் கர்ப்பப்பை கோளாறுகள் மலச்சிக்கல் காமாலை தலைவலி போன்ற நோய்களை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்த செய்கிறது.

இந்தக் கீரையை சாறெடுத்து அதை வாயிலிட்டு சிறிது நேரம் கழித்து கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும்.வாய் துர்நாற்றம் இல்லாமல் போய்விடும் .வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் கீரை சாற்றை1அவுன்ஸ் வீதம் சுமார் 10 நாட்கள் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

மணத்தக்காளி செடியின் வேர் முதல் மணி வரை ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டவை. எந்த வகையிலாவது மனத்தக்காளி உணவுடன் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயமாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories