மிளகு கொடியை நடவு செய்வது எப்படி?
மிளகுக் கொடியை தாய் கொடியிலிருந்து எடுத்து இரண்டு அல்லது மூன்று கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் நடவு செய்ய வேண்டும்.
வேர் பிடித்த இந்தத் துண்டுகளை நடவிற்கு பயன்படுத்தலாம்.
TKM 13 நெல் ரகம் பற்றி கூறவும்?
TKM 13 என்பது டபிள்யூ ஜி எல் – 321oo மற்றும் சுவர்ணா (WGL 321OO/Swarna ஆகிய நெல் ரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் ரகம் ஆகும்.
120 இல் இருந்து 135 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும்.
மாடித் தோட்டத்தில் கீரை வகைகளைப் பயிரிடலாம்? எந்த வகை கீரைகளை பயிரிடலாம்?
மாடித் தோட்டத்தில் கீரை வகைகளைப் பயிரிடலாம்.
கொத்தமல்லி, புதினா, கீரை ,காசினிக்கீரை, சிறுகீரை ,தண்டுக்கீரை ,பாலக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை ,பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றை மாடி தோட்டத்தில் பயிரிடலாம்.
மானாவாரியில் சோளம் எப்படி விதைப்பது ?
சித்திரை மாதத்தில் உழவு செய்து நன்கு மண்ணை காயவிட வேண்டும்.
ஆடி மாதம் சோளம் பயிரிடுவதற்கு சிறந்த காலமாகும் ஆடி மாதத்தில் மழை பெய்தவுடன் மண்ணை உழவு செய்து சோளத்தை விதைக்க வேண்டும்.
ஆறு முதல் ஏழு மாதங்களில் நன்கு வளர்ந்து முற்றிய உடன் அறுவடை செய்ய வேண்டும்.
கறவை மாடுகளுக்கு எவ்வளவு அடர்தீவனம் அளிக்க வேண்டும்?
கறவை மாடுகளுக்கு பால் கறக்கும் அளவினை பொறுத்து தீவனமாக அளிக்க வேண்டும்.
பொதுவாக கறவை மாட்டின் உடல் நிலை பராமரிப்பிற்கு 1.5 கிலோ அடர் தீவனமும், ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.