முருங்கை சாகுபடி  

முருங்கை சாகுபடி  

முருங்கை தாயகம் இலங்கை. தண்ணீர் அதிகமாக தேவை படாத ஒரு பணப்பயிர். தற்போது நடைமுறையில் இரண்டு ரகங்கள் வியாபார ரீதியான பயிரிடப்படுகின்றன. அதாவது செடி முருங்கை மற்றும் மரமுருங்கை.

செடி முருங்கை ரகங்கள் Pkm 1,2 .

மர வகையில் பள்ளப்பட்டி மற்றும் யாழ்ப்பாணம் முருங்கை ,  இவைகள் நாட்டு ரகங்கள் ஆகும்

pkm 2  ரகம் pkm 1  ரகத்தை விட நீளமான காய்கள் இருப்பதால் தொலை தூர சந்தைகளுக்கு அனுப்புவது சற்று சிக்கல்.

செடி முருங்கை விதைகள் மூலம்  மரமுருங்கை போத்து குச்சிகள் மூலம் நடப்படுகிறது.

செடி முருங்கை விதை களை tray க்களில் நட்டு செடிகள் முளைத்த பின்பு இருபது நாள் நாற்று நடலாம் .வளர்ச்சி நன்கு வர மண்புழு உரத்தை தேங்காய் நார் கழிவு உடன் சேர்ப்பது நல்லது.

இடைவெளி செடி முருங்கை பத்து முதல் பதினைந்து அடி மரமுருங்கை இருபது முதல் முப்பது அடி வரை. குழி 1×1 அடி.

இரண்டு முறை நுனி கிள்ளி விடுவதன் மூலம் அதிக துளிர் அதிக கிளைகள். அதிக பூக்கள் அதிக காய்கள். அதிக மகசூல் பெறலாம்.

செடி முருங்கை நட்ட ஆறு மாதங்களுக்குள் காய்ப்புக்கு வரும். காய்ப்பு முடிந்தவுடன் தரையில் இருந்து இரண்டு அடி விட்டு வெட்டி விட வேண்டும். இது போன்று குறைந்து நான்கு முறை விடலாம். மரமுருங்கை க்கு தேவைப்பட்டால் கவாத்து.

மரமுருங்கை துளிர் வந்த உடனே பூக்கள் வரும் அதை கிள்ளி விட்டு. செடி சற்று வளர்ந்த பிறகு பூக்கள் விடலாம். கண்டிப்பாக தண்ணீர் தேங்க கூடாது.

மண்புழு உரம். மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல். உயிர் உரங்கள் இவற்றை தொடர்ந்து வேரில் இடுவதால் திரட்சியான மற்றும் எடை அதிகமான காய்கள் பெறலாம்.

முருங்கையை அதிகம் தாக்குவது கம்பளிப் பூச்சிகள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள். அடுத்து மரங்களை துளைக்கும் புழு .இவற்றை எளிதாக கற்பூரகரைசல் மூலம் எளிதாக கட்டுபடுத்தலாம்.

மீன் அமினோ அமிலம் இலைகள் மீது தெளிப்பதாலும் வேரில் இடுவதாலும் கரும்பச்சை நிற இலைகளை பெறலாம். மற்றும் அதிக வளர்ச்சியும் இருக்கும் என்று சென்னையை சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories