வல்லாரை சாகுபடி முறைகள்!

விவசாயத்தில் அனைத்து பயிர்களும் லாபம் தரக்கூடியதுதான். இருப்பினும் கீரை வகைகளுக்கு சிலர் அதிக முக்கியத்துவம் காட்டுவார்கள். அப்படி ஒருவர் வல்லாரைக்கீரை சாகுபடி பற்றி கூறுகிறார்.

வல்லாரை தண்ணீர் வசதி அதிகம் உள்ள இடங்கள் கால்வாய் ஓரங்களில், தண்ணீர் தொட்டிகளின் அருகில் மற்றும் நீரோடைகளில் ஓரங்களில் நன்கு வளரும்.

வல்லாரை பயிரிட நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். சிறு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். வாய்க்கால்கள் வடிகால் வசதி மற்றும் நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றார் போல அமைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும்.

நன்கு தயார் செய்யப்பட்ட நிலத்தில் 30 அடிக்கு 15 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம். ஒரு கிலோ பக்கக் கன்றுகள் தேவைப்படும் .மூன்றாண்டுகளுக்கு ஒரே இடத்தில் வளர்க்கலாம். கொடிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது நீர் பாசனம் அளித்தல் வேண்டும்.

செடிகளின் இலைகளில் பூச்சித் தாக்குதல் இருந்தால் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். இலைகள் பழுப்பு நிறத்தில் இருந்தால் அதற்கு கற்பூரகரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தெளித்து குணப்படுத்தலாம்[.

நடவு செய்து 120 முதல் 150 நாட்கள் கழித்து இலை மற்றும் தண்டுகளை அறுவடை செய்யலாம்.

இந்த தாவரத்தின் வேர், தண்டு ,இலை, பூ ஆகிய அனைத்துப் பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுகின்றன இதனால் அதிக மகசூல் பெறலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories