வெந்தயக் கீரையின் பயன்கள்

வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பொருட்கள் உடலில் ஏற்படும் இரத்த சோகை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்கு காய்ச்சி காலை மாலை அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

வெந்தயக் கீரையை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் இரத்த குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்.

வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு கண்பார்வை குறை, வாதம் ,சொறி ,சிரங்கு ,இரத்தசோகை ஆகியவை குணமாகும்.

கீரையில் உள்ள பொருட்கள் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories