தென்னை மரம் என்றால் ஒரு மரத்துக்கு இரு கன்றுகள்வீதமும் பாக்குமரம் என்றாலும் ஒரு மரத்துக்கு ஒரு கன்று வீதமும் மிளகை நடவு செய்ய வேண்டும் .மிளகுக் கொடிகள் இந்த மரங்களை பற்றிக்கொண்டு வளர்ந்துவிடும் .தென்னையின் அடியில் வேர்கள் இறுக்கமாக இருக்கும் என்பதால் மரத்தில் இருந்து இரண்டரை முதல் மூன்று அடி தூரம் தள்ளி மிளகு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதேசமயம் கொடிகள் மரத்தை எட்டிப் பிடிக்க ஏதுவாக சிறுகுச்சிகளை அருகில் ஊன்றி வைக்க வேண்டும். கொடிகளை மரத்தில் படர ஆரம்பித்த பிறகு அவற்றின் எடுத்துவிட்டு தரையோடு தரையாக கொடியை வைத்து மூடி மரத்துக்கு அருகில் இருந்து முளைத்து ஏறுவது போல் செய்ய வேண்டும். இதனால் மண்ணுக்குள் இருக்கும் கொடி பகுதியில் புதிய வேர்கள் உருவாகும்.