கோழிகளுக்கு பயன்படும் மீன் அமிலம் மற்றும் பஞ்சகவியம்!
பஞ்சகாவ்யா மற்றும் மீன் அமிலம் குறித்து இங்கு காணலாம். அதாவது இதெல்லாம் இயற்கை உரங்கள் விவசாயத்திற்கு பயன்படுகின்றது என்று அறிந்து இருப்பீர்கள் .ஆனால் இவை கோழிகளுக்கும் ஒரு உணவாகவும் பயன்படுகின்றது அதை பற்றி இங்கு காணலாம்.
மீன் அமிலம்
கோழிகளுக்கு மீன் அமிலம் கொடுக்கலாம். இவை கோழிகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
கோழிகளுக்கு(1 மாதம் முதல் ஐந்து மாதம்) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி முதல் 10 மில்லி வரை கலந்து கொடுக்கலாம்.
ஆரம்ப நிலையில் ஒரு மில்லி கொடுக்க ஆரம்பித்து பிறகு 10 மில்லி வரை சேர்த்துக் கொடுக்கலாம்.
தீவனத்தில் கலந்து கொடுப்பதாக இருந்தால் 15 மில்லி என்ற அளவில் மீன் அமிலத்தை கலந்து கொடுக்கலாம்.
ஆறு மாத வயதுக்கு மேல் உள்ள கோழி களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி முதல் 30 மில்லி வரை கலந்து கொடுக்கலாம்.
மீன அமிலத்தை முட்டையிடும் கோழிகள் மற்றும் இளம் கோழிகளுக்கு கொடுக்கும்போது( 1 முதல் 5 மாத வயதுடைய கோழிகள்) வாரம் இரு முறையும் பெரிய கோழிகளுக்கு வாரத்துக்கு ஒரு முறையும் கொடுக்க வேண்டும்.
மீன் அமிலத்தை கோழிகளுக்கு தினமும் கொடுப்பதால் சளி பிடிக்கும்.
எனவே மீன் அமிலத்தை கோழிகளுக்கு தண்ணீரில் கலந்து கொடுத்தாலும் அல்லது தீவனத்தில் கலந்து கொடுத்தாலும் வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே கொடுக்க வேண்டும்.
பஞ்சகாவியா
கோழிகளுக்கு பஞ்சகாவியா வெயில் காலங்களில்( ஏப்ரல் முதல் ஜூலை வரை) வாரம் இருமுறை கொடுக்க வேண்டும்.
மழை காலங்களில் (ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை )வாரம் ஒரு முறை மட்டுமே பஞ்சகாவ்யாவை கோழிக்கு கொடுக்க வேண்டும்.
பனி காலங்களில் கோழிகளுக்கு சளி பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவசர தேவை என்றால் மட்டும் பனிக்காலங்களில் பஞ்சகாவ்யாவை கொடுக்கலாம்.
வளரும் இளம் கோழிகளுக்கு( 1 மாதம் முதல் ஐந்து மாதம் வயதுடைய கோழிகள் ) பஞ்சகாவியா கொடுக்கும் போது 10 மில்லி முதல் 20 மில்லி வரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்க வேண்டும்.
பெரிய கோழிகளுக்கு( 6 மாதத்திற்கு மேல் உள்ள கோழிகளுக்கு) பஞ்சகாவ்யாவை 15 மில்லி முதல் 25 மில்லி வரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
பஞ்சகாவ்யாவை தீவனத்தில் கலந்து கொடுக்கும் போது ஒரு கிலோ தீவனத்தில் 25 மில்லி பஞ்சகாவ்யாவை கலக்க வேண்டும்.
பனி மற்றும் மழைக்காலங்களில் இளம் கோழிகளுக்கு பஞ்சகாவ்யாவை தண்ணீரில் கலந்து வைக்கும்போது கோழிகளுக்கு சளி பிடிக்கும். அதனால் தீவனத்தில் மட்டும் கலந்து வைத்தால் போதும்.