கோழி வளர்ப்பு என்பது தற்போது லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. அதில் நாட்டுக் கோழிகளுக்கு உள்ள வரவேற்பு கருங்கால் கோழிகளுக்கும் உள்ளது. அதை பற்றி இங்கு காணலாம்.
இந்த நாட்டுக்கோழிகளில் சில பல நிறங்கள் உள்ளன. ஆனால் இந்த கோழிகள் மட்டும் முழுவதும் கருப்பு நிறமாக இருக்கிறது.
இந்த கோழிகளின் சிறப்பே கருமை நிறம் தான். இந்த கோழிகளின் அனைத்து உறுப்புகளும் கருமை நிறமாக இருக்கும். மேலும் தசைகள் நரம்புகள் ரத்தம் ஆகியவையும் கருப்பாக இருக்கும். அதிக வெப்பம் மற்றும் குளிர் தாங்கி வளரும் தன்மையுடைய இந்த கோழிகள் அடை காக்காது மற்றும் ஆண்டு முழுவதும் முட்டையிடும் தன்மை கொண்டது.
நாட்டுக் கோழிகளை போல குறைந்த கொழுப்பு சத்து உடையது .அதிக நோய் எதிர்ப்பு திறனும் நீண்ட காலம் உயிர் வாழும் குணமுடையதாகும். ஒரு கோழி இரண்டு முதல் நான்கு கிலோ வரை வளரும் தன்மை உடையது. இந்த கோழிகளின் வளரும் காலம் ஐந்து மாதங்கள் ஆகும்.
நாட்டுக்கோழிகளுக்கு கொடுக்கும் மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்களை இவற்றிற்கும் உணவாக கொடுக்கலாம் . இந்த கோழிகள் அதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டது.
கருங்கோழியின் இறைச்சி பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. காச நோய் நரம்பு தளர்ச்சி இதய நோய் எலும்பு முறிவு நோய் ஆகிய நோய்களுக்கு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான அமிலங்கள் இறைச்சியில் அடங்கியுள்ளன. கருங்கால் கோழியின் முட்டைகள் தீராத தலைவலி, அடிக்கடி மயக்கம், சிறுநீரக நோய்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
இந்த கோழிகளை வளர்க்க குறைந்த இடவசதி, குறைந்த தீவனம் தேவை போதுமானதாகும்.