கறிக்கோழி வளர்ப்பு என்றால் என்ன? அதனால் லாபம் கிடைக்குமா?…

பல்வேறு நிறுவனங்களில் குஞ்சுகள் விற்பனைக்கு கிடைக்கும். சாதாரணமாக பிராய்லர் இன கோழிகள் குஞ்சொன்றுக்கு ரூ.16 முதல் 22 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதுவே நாட்டுக்கோழி இனம் என்றால் ரூ 8 முதல் 13 ரூபாய் வரை கிடைக்கும்

பிராய்லர் இன கறீக்கோழிகள் முழுமையாக 90 நாட்கள் வளர்ந்த பிறகு விற்பனைக்கு தயாராகிவிடும்.

அதுவரை தீவனங்கள் போட்டு நன்றாக பராமரிக்கவேண்டும், நாள் தவறாமல் கோழிகளின் நிலைகளை பரிசோதிக்க வேண்டும், தேவையான பயோசெக்யூரிட்டிகளை கவனிக்க வேண்டும், மாடால்டியை கட்டுப்படுத்த வேண்டும். கோழிக்களுக்கான மருந்தை ஊசிகளிலும் உணவிலும் சரியாக கலந்து கொடுக்க வேண்டும்.

கருவாடு, சோளம், சோயா, கடற்சிப்பி, அரிசிஎண்ணை, போன்றவைகள் அரவை இயந்திரத்தில் கொடுத்து அரைத்து கோழிகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

அதேபோல் செட்டில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தரையில் உமியை பரப்பி வைத்து வெப்பத்தை குறைக்க ஏது செய்ய வேண்டும், இரு நாட்களுக்கு ஒருமுறையேனும் அந்த உமிகளை களைத்துவிட்டு கழிவுகள் வழியே லார்வாக்கள் தோன்றாமல் பார்த்துக்கொள்ளவும்.

தீவனம் பொறுத்த வரையில் ஸ்டார்ட்டர் ஃபீட், கிரெளத் ஃபீட், ரெகுரல் என வகைப்படுத்தப்பட்டு குஞ்சு பருவம், வளர் பருவம் என உணவளிக்கப்படுகிறது.

90 நாட்கள் வளர்ந்த கோழிகளை வியாபாரிகள் நேரடியாக பண்ணைக்கு வந்து வாங்கி சென்று விடுவார்கள். பண்ணை விலையை செய்தித் தாள்களில் தினந்தோறும் தெரிந்துகொள்ளலாம்.

முக்கியமாக கோழிகளின் எடை நன்கு பராமரிக்கப்பட வேண்டும். 90 நாட்களுக்கு பிறகு இவற்றின் எடை கூடுதலாகாது என்பதால் உங்கள் சந்தை வாய்ப்பை கெட்டியாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு கோழியும் கிட்டத்தட்ட 2 கிலோவுக்கும் அதிகமாக எடை பிடித்திருக்கும். கிலோ ஒன்றுக்கு ரூ.52 முதல் விலை கிடைக்கும் என்பதால் ரூ.22க்கு வாங்கப்படும் குஞ்சுகள் ரூ.120 வரைக்கும் விற்று இலாபம் பெற செய்கிறது.

கோழித் தீவனங்கள், ஆட்கள் சம்பளம் போக நிச்சயமாக நல்ல இலாபத்தை இது உங்களுக்கு கொடுக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories