தேக்கு மரத்தின் நுனிப்பகுதியில் இலை அதிகம் கருகி விடுகிறது .அதை தடுக்க இயற்கையாக என்ன மருந்து தெளிக்கலாம்?
சோற்றுக்கற்றாழை 3.5 கிலோ, இஞ்சி 200கிராம் ஆகியவற்றுடன் புதினா அல்லது சவுக்கு இலை 2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
பிறகு ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள்,ஒரு படி சூடோமோனஸ் 500 கிராம் கலந்து தெளிக்கலாம்.
கத்தரி நாற்று நன்றாக வளர வில்லை மற்றும் இலைகள் சுருண்டு உள்ளது . எப்படி சரி செய்யலாம்?
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் சூடோமோனஸ் கலந்து செடியின் மீது தெளிக்கலாம்.
பிரம்மாஸ்திரம் கரைசலைத் தெளிக்கலாம் அல்லது வேப்பங்கொட்டை சாறு தெளிக்கலாம். இவற்றைத் தெளிப்பதன் மூலம் கத்தரி நாற்று நன்றாக வளரும்.
கடற்பாசி சாற்றில் உள்ள சத்துக்கள் யாவை?
கடற்பாசி சாற்றில் தழைச்சத்து 0.10- 0.19 சதம், மணிச்சத்து 0.2o முதல் 0.58 சதம், சாம்பல்சத்து 1.02- 2.06 சதம் உள்ளது.
கால்சியம் 0.11 சதம் ,மெக்னீசியம் 0.01சதம் ,சோடியம் 0.13 சதம் இரும்புச்சத்து உள்ளன.
மேலும் துத்தநாகம், குளோரின் சிறிதளவு, குளோரின் சல்ஃபர் ,போரான், கோபால்ட் ,மாலிப்டினம் சிறிதளவு, வளர்ச்சி ஊக்கிகள்( ஆக்சிஜன் ,ஜிப்ரலின் ,சைட்டோகைனின் சிறிதளவு ஆகியவை கடல் பாசியில் உள்ள சத்துக்கள் ஆகும்.
கோழிகளுக்கு எப்படி தீவனம் கொடுக்க வேண்டும்?
மக்காச்சோளம் ,கம்பு ,கடலை புண்ணாக்கு, அரிசி தவிடு, தாது உப்பு, சாதாரண உப்பு ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கோழிகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
கொம்பு சாண உரம் தயாரிப்பு முறைகள் யாவை?
இயற்கையாக இற ந்த பசு மாட்டு கொம்பை எடுத்து அதில் பசும் சாணத்தை நிரப்ப வேண்டும்.
தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் ஒரு அடி ஆழ குழி கரண்டி அதற்குள் இந்த கொம்பை புதைத்து விட வேண்டும்.
சுமார் ஆறு மாத காலம் கழித்து எடுத்துப் பார்த்தால், கொம்பு வைக்கப்பட்டது சாணம் ஆனது காப்பித்தூள் போல இருக்கும்.
இதை மண் பாத்திரத்தில் ஒரு ஆண்டுகாலம் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
ஒரு அடி அளவுள்ள கொம்பில் 180 கிராம் வரை உரமும் கிடைக்கும். ஒரு கொம்பை இரண்டு முறை கூட பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கர் நிலத்துக்கு 30 கிராம் கொம்பு சாண உரத்தை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.