கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது! கோழி வளர்ப்போர் உடனே பயன்பெறுங்கள்!

கால்நடை பராமரிப்புத்துறையின் (Department of Animal Care) மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்புக்காக கோழிகளுக்கு தடுப்பூசி (Vaccine) போடும் முகாம் இரண்டு வாரம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தடுப்பூசி போடும் முகாம் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை நடைபெறவுள்ளது எனவே,

கோழிகளுக்கு தடுப்பூசி
முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி (Vaccine) போடப்படவுள்ளது. எனவே அனைத்து கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கோழி வளர்ப்போர் பங்கேற்று, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கோழிகளுக்கு தடுப்பூசியை போட்டுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் இந்த முகாமில் எண்ணற்ற விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த ஆண்டும் அதிக விவசாயிகள் முகாமிற்கு வருவார்கள் என்று எண்ணப்படுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories