கோழிகளுக்கு ஹைட்ரோபோனிக் முறையில் தயாரித்த தீவனங்களை கொடுக்கலாமா?

காதி சோப்பு எங்கு கிடைக்கும்? அதை ஒரு லிட்டருக்கு எவ்வளவு உபயோகிக்க வேண்டும்?

அருகில் உள்ள காதி கிராப்ட் இல் கிடைக்கும்.

50 மில்லி வேப்ப எண்ணெய் தண்ணீரின் வேப்பெண்ணெய் தண்ணீரின் திட நிலை 20 கிராம் காதி சோப்பு பயன்படுத்தலாம்.

இயற்கை விவசாயத்தில் வளர்ச்சி வகையான ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலத்தை தெளிப்பதற்கு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

ஜீவாமிர்தத்தை தெளிப்பு பயன்படுத்தும்போது 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் கலந்து தெளித்தால் வேண்டும்.

இதேபோல தெ லீப்புக்கு மீன் அமிலத்தை பயன்படுத்தும்போது பத்து லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தல் வேண்டும்..

பசுந்தீவனம் அளிப்பதில் அசோலா ஏன்முக்கிய பங்கு வகிக்கிறது?

அசோலா மிக விரைவாக வளர்ந்து குறுகிய காலத்தில் அதிக மகசூலை கொடுக்கும் தீவனமாகும்.

இது மூன்று முதல் ஐந்து நாட்களில் இரண்டு மடங்காக பெருகும் தன்மை கொண்டது. இதனால் பால் உற்பத்தியை பெருக்குகிறது. பாலின் இதர சத்துக்களையும் அதிகரிக்கிறது.

இயற்கை களைக்கொல்லி எப்படி தயார் செய்து பயன்படுத்துவது?

முளைத்த களைச் செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு களைச்செடிகள் வளர்ந்திருந்தால் இரண்டு கிலோ கல் உப்பை 10 லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும். அதனுடன் வேப்ப எண்ணெய் சாறு 100 மில்லிய இதனுடன் ஊற்றி கலக்கவும்.

பிறகு வடிகட்டி கைத்தெளிப்பான் மூலம் செடிகளின் மீது (பயிரின் மீது படாமல்) தெளிக்கவும் .அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து கலை செடிகளும் கருகிவிடும்.

கோழிகளுக்கு ஹைட்ரோபோனிக் முறையில் தயாரித்த தீவனங்களை கொடுக்கலாமா?

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தயாரித்த தீவனத்தினை கோழிகளுக்கு கொடுப்பதால் தரமான முட்டை உற்பத்தியில் அடர்த்தியான மஞ்சள் கரு உற்பத்தி மற்றும் இயற்கையான முறையில் முட்டை சுவையை அதிகரிக்கும்.

தரமான மற்றும் சுவையான கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய முடியும். கோழிகளின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories