கோழிகள் சில சமயங்களில் தோல் முட்டையிட என்ன காரணம்?

சரளை மண்ணில் என்ன மரம் வளரும்?

உவர் நிலப்பகுதியிலும் கரிசல் மண் சரளை மண்ணிலும் வளமற்ற மண்ணிலும் வளரும் தன்மை பெற்றது பீ தனக்கண் மரம்.

பீ தனக்கண் மரத்தை தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் வளர்க்கலாம் குறிப்பாக வறண்ட பகுதிகளில் பயிரிட இம்மரம் மிகவும் ஏற்றது.

மாடி தோட்டம் அமைப்பதில் உள்ள நன்மைகள் என்ன?

மாடி தோட்டம் அமைப்பதில் உள்ள நன்மைகள், மாடித் தோட்டம் அமைப்பதால் வெயில் காலங்களில் அதிகமான வெப்பம் தாக்காமல் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

மேலும் நல்ல சுகாதாரமான சுற்றுச்சூழல் இருந்து நல்ல காற்று கிடைக்கும் நாம் உண்ண சுவையா ரசாயனம் இல்லாத காய்கறிகளை நாமே விளைவிக்கலாம்.

தென்னை நார் கழிவுகளை பயன்கள் என்ன?

மக்கிய தென்னை நார்க்கழிவு எல்லா வகை பயிர்களுக்கும் விதைப்பதற்கு முன்பு அடி உரமாக பயன்படுத்தலாம்.

இது மணற்பாங்கான மண்ணின் கடினத்தன்மையை அதிகப்படுத்தி மற்றும் களிமண்ணை காற்றோட்டமுள்ள தாக்குகிறது.

நீரை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை அதிகப்படுத்தி மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்துகிறது.

இந்த மக்கிய உரத்தில் அனைத்து தாவர சத்துக்களும் இருப்பதால் இது செயற்கை உரத்தைப் பெரிதும் பயன்படுகிறது.

மக்கிய உரம் ஆதலால் இது மண் வாழ் நுண் உயிரினங்களை அதிகப்படுத்துகிறது.

தூயமல்லி நெல்லை எந்த பட்டத்தில் விதைக்கலாம்?

தூயமல்லி என்ற நெல்லிற்கு தூயமல்லி சம்பா என்ற பெயரும் உண்டு எனவே ஆடி மாதம் 18-ஆம் தேதிக்கு பிறகு உள்ள சம்பா பட்டங்களில் நேரடியாகவோ அல்லது நாற்றங்கால் முறையைப் பின்பற்றிய விதைக்கலாம். இது 15o நாட்களில் அறுவடைக்கு வரும்.

கோழிகள் சில சமயங்களில் தோல் முட்டையிட என்ன காரணம்?

கோழிகள் கால்சியம் பற்றாக்குறையின் காரணமாக தோல் முட்டையிடும். கால்நடை மருத்துவமனைகளில் கிடைக்கும் கால்சியம் டானிக் மருத்துவரின் பரிந்துரைப்படி கொடுக்கலாம்.

பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து அதை தண்ணீரில் கலந்து வைக்கலாம் அல்லது முருங்கை இலையை அரைத்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து வைக்கலாம்.

மேலும் ஆற்றுப்படுகையில் கிடைக்கும் சிப்பிகளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து அதை நன்கு இடித்து தூள் செய்து வைக்கலாம்.

முட்டையிடும் பிரச்சனையை நீக்கிய உடனே நிறுத்திவிட வேண்டும்.அதிகமாகக் கொடுத்தாலும் கோழிகள் மலடாக வாய்ப்புள்ளது .

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories