நிழலில் வளரும் காய்கறிகள் என்னென்ன?
சில காய்கறி பயிர்கள் நிழலில் நன்றாக வளரும் இயல்பை பெற்றுள்ளன. இத்தகைய பயிர்கள் சூரிய ஒளி இல்லாத நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வளரும்.
அந்த வகையில் சுண்டக்கா மற்றும் பூசணி, கீரை, பூண்டு ,பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகள் நிழலில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
ஏ ன் உயிரி உரங்களை பயன்படுத்த வேண்டும்?
ரசாயன உரங்களின் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மண்வளத்தை உயிர் உரங்கள் சரியான அளவு பயன்படுத்துவதன் மூலம் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்.
உயிர் உரங்கள் பயன்படுத்தினால் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை கூடும். மண்ணிலுள்ள துளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
தென்னை மரங்களை காப்பீடு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?
தென்னை தோப்பு வரைபடம் ,சாகுபடி செய்து தென்னை மரங்கள் எண்ணிக்கை, வயது , பராமரிப்பு முறை ,தற்போதைய ஆரோக்கிய நிலை, நோய் பூச்சி ,வறட்சி ,வெள்ளம், இடி ,மின்னல் போன்ற காரணிகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து சுய அறிவிப்பு கடிதம் மற்றும் இத்திட்டத்தில் சேரும்போது காப்பீடு செய்யப்படும் தென்னை மரங்கள் நன்கு காய்க்கும் நிலையில் உள்ளதா என உதவி இயக்குனரிடம் தெரிவிக்கவேண்டும்.
வாழை கிழங்குகளில் துளையிடும் பூச்சிகளை எப்படி தடுக்கலாம்?
நெல் உமி சாம்பல் பயன்படுத்தினால் கிழங்கு சம்பந்தமான பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும். நோய் தாக்குதலும் இருக்காது.
மூன்றாவது மாதம் ஒவ்வொரு வாழைக்கும்10 கிலோ நெல் .உமி .சாம்பல் போடவேண்டும்.வாழையில் உள்ள அனைத்து ரகங்களுக்கு நெல் ,உமி ,சாம்பல் ,பயன்படுத்தலாம்.
கோழி ஒரு ஆண்டுக்கு எவ்வளவு முட்டையிடும்?
முதலில் முதிராத ஓடுகள் உடன் சிறிய அளவில் முட்டையிடும் .அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும்.
ஒரு கோழி சராசரியாக ஒரு ஆண்டிற்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.