கரும்பு சாகுபடியில் ஏன் போத்துகளை நீக்க வேண்டும்?
கரும்பு பயிரின் வளர்ச்சி பருவத்திலிருந்து முதிர்ச்சி பெறுவதற்கு செல்லும் போது புதிதாக பக்க சிம்புகள் வெடித்து வளரும்.
இதில் வளர்ந்த கரும்புக்கு செல்லும் சத்துக்களையும் கிரகித்துக் கொள்வதால் கரும்பின் தரம் குறையும் எனவே பக்கத்து களை அகற்ற வேண்டும்.
புகையிலையில் எப்பொழுது கொழுந்து மற்றும் சிம்பு ஒடிக்க வேண்டும்?
நடவு செய்ததிலிருந்து 60 முதல் 70 நாட்களில் செடி பூக்கும் தருணத்தில் 10 முதல் 12 கிளைகள் விட்டு கொழுந்துகளை குடிக்க வேண்டும்.
செடிகளின் கணுக்களில் சிம்பு வளர்வதை 35 சதம் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் இதனால் விளைச்சல் அதிகரிக்கும்.
வயலில் ரோஜா செடிக்கு எப்படி நீர் பாய்ச்ச வேண்டும்?
வயலில் ரோஜா செடிகள் செடிகளை நட்ட உடன் நீர் பாய்ச்சவேண்டும் அதைத் தொடர்ந்து செடிகளில் வேர் பிடித்து துளிர்விடும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் பிறகு மண் மற்றும் கால நிலைகளுக்குத் தகுந்தவாறு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
சிகப்பு நிற வெண்டை பற்றி கூறுக?
சிகப்பு வெண்டை பாரம்பரியத்தையும் சார்ந்தது வரட்சி மட்டும் ஓரளவு ஈரம் இரண்டையுமே தாங்கி வளரும் தன்மையுடையது தண்டு சற்று உறுதியாக இருக்கும்.
கேரள மாநிலத்தில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது சாதாரணமாக பட்டம் என்று வரும்போது இந்த ரகத்தை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம்.
கோழி ஒரு ஆண்டுக்கு எவ்வளவு முட்டையிடும்?
முதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும் அந்த முட்டை தோல் முட்டை எனப்படும் அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும்.
ஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாட்கள் முட்டையிடும் பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரிக்கும் ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.