நல்ல சத்தான கோழி வளர்ப்பு – அருமையான தீவன முறைகள்!

கோழி வளர்பில் தீவனப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி வளர்ப்புச் செலவின் 60-70 சதவிகிதம் அளவு தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் தீவனம் வீணாகாமல் முழுமையாக கோழிகளால் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரு லாபகரமான பண்ணையை உருவாக்க முடியும்.

40க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கோழிகளுக்கு தேவைப்படுகிறது. இவை நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. கார்போஹைட்ரேட் (Carbohydrate) மற்றும் கொழுப்புக்களே (Fat) ஆற்றலுக்கு பிரதானமானவை. கொழுப்பில் கார்போஹைட்ரேட் விட 2.25 மடங்கு ஆற்றல் அதிகமாக உள்ளது.

பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட்ஸ், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவைகளையும் தீவனமாகக் கொடுக்கலாம். மேலும் மீன் தோல் கழிவுகள், இறைச்சி கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித் தீவனமாகப் பயன்படுத்தலாம். இதோடு தாதுக்களும் விட்டமின்களும் கலந்து சரிவிகித உணவாகக் கொடுத்தல் வேண்டும்.

கோழிகளுக்கான தீவனம்

கீழ்காணும் தீவனப் பொருட்கள் நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சோளம் – Maize
இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரித்தல் எளிதாகிறது. குறைந்தளவு புரதமும், அதிக ஆற்றலும் கொண்டது. லைசின், சல்ஃபர் அமினோ அமிலங்களைப் பெற்றுள்ளது. மஞ்சள் நிறச் சோளத்தில் விட்டமின் மற்றும் சோன்த்தோடஃபில் நிறமி நிறைந்துள்ளது. இந்த நிறமிகள் தான் சிலவகைப் பறவைகளின் மஞ்சள் தோலிற்குக் காரணம் என்றார்.

பார்லே – Barley
இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் 15 சதவிகிதத்திற்கு மேல் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

ஓட்ஸ் – Oats
ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகமிருப்பதால் 20 சதவிகித அளவே சேர்க்கவேண்டும். இதில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால் கோழிகளில் கால் பிரச்சினை, இறகை பிடுங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னின ஊன் ஊன்றுதல் போன்ற குறைபாடுகளை குறைக்க முடியும்.

”ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்!

கோதுமை – Wheat
சோளத்திற்குப் பதில் அதிக ஆற்றல் அளிக்க கோதுமை பயன்படுகிறது.

கோதுமை தவிடு – Wheat bran
இந்த கோதுமை தவிட்டில் மாங்கனீஸ் பாஸ்பரசுடன் சிறிது நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

கம்பு – Pearl millet
கோதுமை போலவே நல்ல ஆற்றல் வழங்கியாக கம்பு செயல்படுகிறது.

அரிசி – Rice
உடைந்த அரிசி குருணைகள் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரரேட் மிகுந்துள்ளது.

பாலிஸ் செய்யப்பட்ட அரிசி – Polished rice
இது ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகையால் 50 சதவிகிதம் வரை தீவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் சிறிது எண்ணெய்ச் சத்தும் உள்ளது. சரியாக பராமரிக்கப்படவில்லை எனில் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும்.

எண்ணெய் நீக்கப்பட்ட பாலிஸ் அரிசி – Deoiled rice polish
எண்ணெய் நீக்கப்பட்டதால் இதில் கொழுப்புச் சத்துக் குறைவே. எனினும் சாம்பல் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

வெள்ளைச் சோளம் – Sorghum
இது மஞ்சள் சோளம் போன்றே ஊட்டச்சத்துக்களைப் பெற்று இருந்தாலும் அதை விட வெள்ளைச் சோளத்தில் புரதம் அதிகம். கோழிகள் விரும்பி உட்கொள்ளும். மேலும் இதில் சில அமினோ அமிலங்கள் புண்ணாக்கில் இருப்பதைக் காட்டில் அதிக அளவில் உள்ளன.

கடலைப்புண்ணாக்கு – Groundnut-cake
இதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. 40 சதவிகிதம் வரை தீவனக் கலவையில் பயன்படுத்தலாம்.

மீன் தூள் – Fish-meal
இது ஒரு சிறந்த கோழித்தீவனம். இதில் விலங்குப் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்பு மீனா அல்லது கலனில் அடைத்த மீனா என்பதைப் பொறுத்து பயன்படுத்தும் அளவு வேறுபடும். இந்திய மீன் துகள்களில் 45-55 சதவிகிதம் புரதம் உள்ளது. மீனில் செதில்கள் இருந்தால் தீவனத்தரம் குறையலாம். எனவே செதில்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

சுண்ணாம்புக்கல் – Limestone
சுண்ணாம்புச் சத்து அதாவது கால்சியம் மிகுந்தது. எனினும் 5 சதவிகிதம் மேல் கோழித் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

கடற்சிப்பி ஓடு – Oyster-shell
இதில் 38 சதவிகிதம் வரை கால்சியம் இருப்பதுடன் சுவை மிகுந்தது. சுண்ணாம்பிற்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது.

நோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories