நாட்டுக்கோழிகளுக்கு மழைக்காலத்தில் வரும் நோய்கள்

 

நாட்டுக்கோழிகளுக்கு மழைக்காலத்தில் வரும் நோய்கள்

வெள்ளைக் கழிச்சல்
சளி மற்றும் சுவாசக் கோளாறு
வாத நோய்
கோழி காய்ச்சல்
தோல் முட்டையிடுதல்

இது போன்ற நோய்கள் மழைக் காலத்தில் கோழிகளை பாதிக்கும்

நோய்கள் வந்த பிறகு மருத்துவம் செய்வதை விட நோய் வருவதற்கு முன்பே பாதுகாப்பதே சிறப்பு கோழிகளுக்கு நோய்கள் வர முக்கிய காரணம் குடற்புழுக்கள்

தாய்க்கு கோழிகளுக்கு2 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

வளரும் இளம் கோழிகளுக்கு ஒரு மாதம் முதல் ஐந்து மாதம் வரை உள்ள கோழிகள் மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் மருத்து கொடுக்கவேண்டும்.

இயற்கை முறையில் கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய தேவையான பொருட்கள்

ஆகாச கருடன் கிழங்கு 0.5 கிலோ
சோற்றுக் கற்றாழையை 0.5 கிலோ
குப்பை மேனி 0.5
பூண்டு 0.25 கிலோ
கருஞ்சீரகம் 25 கிராம்
மஞ்சள் 100 கிராம்
வேப்ப இலை 0.5 கிலோ
சீரகம் 50 கிராம்
சின்ன வெங்காயம் 0.25 கிலோ
மிளகு 25 கிராம்

செய்முறை

ஜீரகம் ,மிளகு, கருஞ்சீரகம் ஆகிய மூன்று பொருட்களை வறுத்து பொடி செய்து கொள்ளவும். மஞ்சள்தூளை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையுடன் மஞ்சள் தூள் மற்றும் பொடி செய்த கலவையை ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக கோழிகளுக்கு காலை தீவனத்திற்கு முன்பு கொடுக்க வேண்டும் அல்லதுகாலை தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.

இந்த மருந்தை கோழிகளுக்கு கொடுக்கும்போது குடற்புழு வெளியே வந்துவிடும். இந்த மருந்தை 200 பெரிய கோழிகளுக்கும் இளம் நானூறு கோழிகளுக்கும் கொடுக்கலாம்.இந்த மருந்தை தயாரித்தஐந்து மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories