நாட்டுக்கோழி இனங்கள்!

கடக்நாத் அல்லது கருங்கால் கோழி:

இவ்வினம் பொதுவாக கலமாசி என்று அழைக்கப்படும், கருப்பு சதையுடைய கோழி ஆகும்.

இதன் உடல் உள்ளுறுப்புக்கள் கருமை நிறமாக இருக்கும்.உடலில் தசைகள், நரம்புகள், மூளை முதலியவை கருப்பு நிறத்தில் காணப்படும்.

இதற்கு காரணம் மெலனின் எனப்படும் நிறமி ஆகும்.

அதிக வெப்பத்தையும், குளிரையும் தாங்கி வளரும் தன்மை உடையது.

கோழிக்குஞ்சுகள் நீலம் மட்டும் கருப்பு நிறத்துடன், பின்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படும்.

பருவமடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும் .

தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருக்கும்.

மொட்டை கழுத்து கோழி:

இவ்வினத்தின் கழுத்துப்பகுதியில் இறகுகள் இல்லாமல் வெறுமையாகவும், அல்லது கழுத்தின் முன்பகுதியில் கொத்தாக சிறகுகள் இருப்பதால் இதற்கு மொட்டை கழுத்து கோழி என்று பெயர்.

இவ்வினம் நீளமாக உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும்.

பருவ வயதை அடையும் பொழுது சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்.

இதர இனங்கள்:
சிட்டகாங்:

சிட்டகாங் கோழி இனம் மிகப்பெரிய உடல் கொண்டது. இது சிறந்த சண்டையிடும் கோழி ஆகும். இதன் வால் பகுதி தொங்கிக் கொண்டிருக்கும். இந்த இனம் குறைந்த முட்டை இடும் திறன் கொண்டது.

இந்த சேவலின் உடல் எடை 3.5 – 4.5 கிலோவும், கோழியின் உடல் எடை 3 – 4 கிலோவும் இருக்கும்.

பஸ்ரா இன நாட்டுக்கோழிகள் பொதுவாக இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன.

இந்த கோழி இறகுகள் கருப்பு, வெள்ளை நிறம் கலந்தும், கழுத்தின் மேற்பகுதி, வால் புரம், தோள்பட்டை இறகுகள் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
நிக்கோபாரி :

நிகோபாரி இனங்கள் பழுப்பு,கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

சிறிய உடலமைப்புடன் ,குட்டையான கால்கள் மற்றும் கழுத்துடன் காணப்படும் .

நாட்டுக்கோழி இனங்களிலேயே, நிக்கோபாரி இனம் அதிக முட்டையிடும் குணம் கொண்டது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories