நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம்- சேர முன்வருபவருக்கு முன்னுரிமை!

விவசாயிகளும், தொழில் முனைவோரும் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் சேர்ந்துப் பயனடையுமாறு, தருமபுரி மாவட்ட வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

40 பயனாளிகள் ஒதுக்கீடு (Allocation of 40 beneficiaries)
தர்மபுரி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் 2020-21 மூலம் 1000 நாட்டுக்கோழிகள் வளர்க்க ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 5 பயனாளிகள் வீதம் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 40 பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர் எனவே

முதல் தவணை (First installment)
இதில் முதல் தவணையாக 20 பயனாளிகள் (ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 பயனாளிகளுக்கு மிகாமல்) தேர்வு செய்யப்பட்டனர்.

20 பேர் தேர்வு (20 people selected)
தற்போது இரண்டாவது தவணை யாக மீதமுள்ள 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 20 பயனாளிகளில் 11 பயனாளிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளனர் மற்றும்

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் (Key features of the project)
பயனாளி 1000 எண்ணிக்கை பாலினம் பிரிக்கப்படாத இரட்டைப் பயன் (இறைச்சி/முட்டை) நாட்டுக் கோழிக் குஞ்சுகளை, ரூ.30,000/-க்கு கொள்முதல் செய்த பின்னர், பின்முடிவு மானிய மாக ரூ.15,000/- பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

பயனாளி 1500 கிலோ கோழித் தீவனத்தை, ரூ.45,000க்கு கொள்முதல் செய்த பின்னர், பின்னேற்பு மானியமாக 22,500 ரூபாய் பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

பயனாளி ரூ75,000 மதிப்புள்ளக் குஞ்சுப்பொறிப்பானைக் கொள்முதல் செய்த பின்னர், பின்முடிவு மானியமாக ரூ.37,500 பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

ஒவ்வொரு பயனாளியும், சேவல்களை 16 வாரங்கள் வரையிலும், முட்டைக்கோழிகளை 72 வாரங்கள் வரையிலும் வளர்க்க வேண்டும் என்றார்.

சேவல்கள், கோழி முட்டைகள், கருவுற்ற முட்டைகள், கழிக்கப்பட்டக் கோழிகள் மற்றும் கோழிக்கழிவு உரம் முதலியன விற்பனை செய்வதன் மூலம் பயனாளிகள் வருமானம் பெற்றுப் பயனடையும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தகுதிகள் (Qualifications)
1000 கோழிகள் பராமரிப்புக்குச் சொந்தமான குறைந்தபட்சம் 2000 முதல் 2500 சதுர அடி கோழிக்கொட்டகை மற்றும் பகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.

கோழி வளர்ப்பில் அனுபவம் மற்றும் ஆர்வம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

அதே கிராமத்தில் நிரந்திரமானக் குடியிருக்கும் பண்ணையாளராக இருத்தல் அவசியம்.

விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் தேர்வு செய்யப்படுவர்.

2021 முதல் 2017 வரையிலானக் கோழி அபிவிருத்தித் திட்டம் மற்றும் 2018-19ம் ஆண்டின் தொழில்நுட்ப கோழி வளர்ப்பு திட்டப் பயனாளிகளாக இருக்கக் கூடாது.

3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க வேண்டும்.

விண்ணப்பம் (Application)
மேற்கண்ட தகுதிகள் இருப்பின் விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தினை அருகிலுள்ள கால்நடை மருந்தகக் கால்நடை உதவி மருத்துவரிடம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories