நாட்டுக்கோழி வளர்ப்பு முறை

கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு அதிகமாக காணப்படும். நாட்டு கோழி முட்டை இறைச்சி போன்றவைகளுக்கு அதிக லாபம் உள்ளது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவதற்கு நாட்டுக்கோழி வளர்ப்பு முறையை ஏற்றது .நாட்டுக்கோழி வீட்டிலேயே வளர்த்து லாபம் பெறலாம் .அதற்கு தகுந்த முறைகளை கையாள வேண்டும் .வீட்டிலேயே பண்ணை அமைத்து கோழிகளை வளர்க்கலாம்.

முதலில் பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் பறவைகளை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பறவைகள் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுகிறது. பண்ணைக்கு அருகில் செடி கொடி மரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே தரவேண்டும். 48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கொடுக்கலாம். எடை அதிகரிக்க பனங்கருப்பட்டியை நீரில் கலந்து கொடுக்கலாம். காய்கறிகளான கேரட் வெங்காயம் போன்றவற்றை சிறு துண்டுகளாக்கி கொடுக்கலாம் .நாட்டுக் கோழிக்கு ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு போன்றவை தீவனமாகக் கொடுக்கலாம். நாட்டுக்கோழிகள் தனக்குத் தேவையான தீவனங்களை தானே தேடிக் கொள்கிறது.

நாட்டுக்கோழிகளுக்கு பொதுவாக தடுப்பு நோய்தடுப்பு தேவையில்லை. இருந்தாலும் இராணிகெட் தடுப்பூசியும் எட்டாவது வாரத்தில் போடுவது சிறந்தது .தடுப்பூசி போடுவதற்கு முன்பு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் .நாட்டுக்கோழி வளர்ப்பு இயற்கை தீவனம், கண்காணிப்பு, பராமரிப்பு போன்றவை மிக முக்கியமானது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories