நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஒரு கூடையில் பாதி அளவு உலர்ந்த தவிடு, வைக்கோல், கூளம் ,மரத்தூள் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல செய்துகொள்ளவேண்டும் .அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.
அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடைகாக்கும். இந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும். கோழி குஞ்சு பொறிக்கும் காலம் 21 நாட்களாகும் .அடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாட்கள் வரை அ டையில் அமர்ந்து இருக்கும். பிறகு எழுந்து சென்று எச்சமிட்டு, உணவு,நீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்த கூடையை அருகிலேயே உணவுதண்ணீரை வைக்க வேண்டும். தினமும் தாய் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் உடன் நன்கு பழகியவர்கள் தாய்க்கோழி அகற்றி விட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடை காக்கத் தொடங்கிய 21 நாட்களில் குஞ்சு பொறிக்கும்.