நாட்டுக் கோழி வளர்ப்பு……

கிராமங்களில் ஏழை விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஒரு பகுதியாக ஈட்டி கொடுக்கின்றனர்.

நாட்டுக் கோழிகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் திடீர் தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரமாகவும்,நிலையான வருமானம் தரக்கூடியதாகவும். நெருக்கடி காலங்களில் கை கொடுப்பதற்காகவும் இருக்கின்றன.

கிராம புறங்களில் வாழும் மக்களின் தேவையை நிறைவு செய்வதிலும் நாட்டுக்கோழி வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டு கோழிகள் வளர்ப்பதன் மூலம் தமது வாழ்க்கை தரத்தை உயர்த்தவும்,இத்தொழில் உதவுகிறது.

கஷ்டப்பட்டு கைகால் தேஞ்சு போகும் மனிதர்களுக்கு ஈஸியாக வருமானம் பெற நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் துணை நிற்கிறது.

வீட்டில் இருந்த படியே மாதம் மாதம் வருமானம் பெற ஓர் அறியவாய்ப்பை இந்த தொழில் அளிக்கிறது. மேலும் நாட்டுக்கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. சத்துக்கள் நிறைந்த நாட்டுக்கோழி இறைச்சிக்கு நாடெங்கும் அமோக வரவேற்பு உள்ளது.

கிராம மக்களின் ஊட்டச்சத்து நிலைப்பாட்டையும் உறுதி செய்யும் தன்மை நாட்டுக்கோழிகள் இறைச்சிக்காவும்,முட்டை உற்பத்தியாகவும்,பல்வேறு ஆராய்ச்சியின் விளைவாகவும் உருவாக்கப்படுகிறது.

அதிக எண்ணைக்கையில் குறுகிய இடத்தில் அதிக லாபம் பெறலாம். எனவேதான் இந்த தொழில் நகரப்பகுதியில் வளர்த்து வருகிறது. கிராமப்புற பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள்,நலிந்த பிரிவினர்,தொழில் செய்ய விரும்புவோர் இந்த தொழிலை தொடங்கி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories