புறக்கடையில் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழி வளர்க்க எளியவழி முறைகள்!

நாட்டுக்கோழி வளர்ப்பு தற்போது இலாபகரமான தொழிலாக மாறி வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நாளுக்கு நாள் நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பது மட்டுமல்லாமல் வீட்டிற்குத் தேவையான விலங்கின புரதம் (முட்டை மற்றும் இறைச்சி) கிடைக்கிறது. அதிக இலாபம் பெறுவதற்கு முட்டை அல்லது இறைச்சிக்கான தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழியினங்களுக்கு எளிமையான தீவன மற்றும் மேலாண்மை யுக்திகளைக் கடைபிடித்தால் நல்ல இலாபம் பெறலாம். இத்தொகுப்பில் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் மற்றும் பராமரிக்க கடைபிடிக்க வேண்டிய எளிய தொழில் நுட்பங்கள் பற்றி காண்போம்

புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
குறைந்த அளவு முதலீடு

குறைந்த அளவு இடவசதி

எளிய கொட்டகை அமைப்பு

நாட்டுக்கோழி அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டது

மக்களிடையே நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி மற்றும் இவற்றினால் செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு அதிகமான வரவேற்பு உள்ளது. சுவைமிக்க இறைச்சி மற்றும் முட்டை நல்ல விலைக்கு விற்கலாம்.

நாட்டுக்கோழி வளர்ப்பதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு புரதச்சத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலும்

சுமார் 10-15 நாட்டுக்கோழிகள் வளர்ப்பதால் ஒரு நாளைக்கு 1 முதல் 1.2 கிலோ எரு கிடைக்கும்

புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளில் இருந்து கிடைக்கப்பெறும் முட்டை மற்றும் இறைச்சியில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரிய வருகிறது

தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகள்
நாட்டுக் கோழிகள் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையிலும் இருவகை பயன்பாடு உள்ள, அதாவது (முட்டை மற்றும் இறைச்சி) வகை வெளி நாட்டு கோழிகளின் மரபணு பண்புகளை உள் நாட்டு கோழி இனங்களின் மரபணு பண்புகளுடன் சேர்த்து தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் உருவாக்கப்படுகின்றன

தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழியின் குணாதிசயங்கள்
பல வண்ணங்களுடன் நாட்டுக்கோழி போலவே காட்சியளிக்கும் அடைகாக்கும் குணம் காணப்படுவதில்லை

அதிக முட்டைகள் இடும் தன்மையுடையவை

தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழிகளில் முட்டை மற்றும் இறைச்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நாட்டுக் கோழிகளைப் போன்றே இருக்கும்

அதிக எடையும், அதிக கருவுறும் திறன் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் கொண்டவை

போதுமான புறக்கடை வசதி இருக்கும் பட்சத்தில் 10 முதல் 20 தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் அல்லது நாட்டு கோழிகளை வளர்க்கலாம் . தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழி இனங்களை ஆழ்கூள முறையிலோ அல்லது புறக்கடையில் வளர்க்கலாம். புறக்கடையில் தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழி இனங்களை வளர்க்கும் போது ஒவ்வொரு கோழியும் சுமார் 140 முதல் 150 முட்டைகள் இடும். ஆனால், அதுவே ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது 160 முதல் 200 வரை முட்டை உற்பத்தி இருக்கும் எனவே,

தரமான இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சேவல்களை தேர்வு செய்தல்
லாபகரமான புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பிற்கு தரமான கருவுற்ற முட்டைகளை உற்பத்தி செய்தல் வேண்டும் .அவ்வாறு செய்ய முற்படும்போது மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே தரமான இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சேவல்களை தேர்வு செய்ய வேண்டும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சேவல் கீழ்கண்ட குணாதிசயங்கள் கொண்டவையாக இருக்க வேண்டும் முழுமையான மார்பு கொண்டதாகவும் சமமான நேரான முதுகும் நேரான கால்களும் கொண்டதாக இருக்கவேண்டும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் இனச்சேர்க்கைக்கு ஒரு சேவலுக்கு பத்து பெட்டைக் கோழிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு சேவல் ஆறு முதல் எட்டு கோழிகளுடன் இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தலாம்

புறக்கடையில் தீவன மேலாண்மை
நாட்டுக் கோழிகளை அல்லது தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி புறக்கடையில் வளர்க்கும் போது போதுமான சமச்சீர் தீவனம் தரவேண்டியது இன்றியமையாததாகிறது. குறிப்பாக மாவுச்சத்து, தாது சத்து, உயிர் சத்து மற்றும் புரதம் நிறைந்த கீரை வகைகள் மற்றும் கரையான்களை அளிக்கலாம். நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு கரையானை உயிருடன் தீவனமாக கொடுக்கக் கூடாது

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு அதிக எண்ணிக்கையில் முட்டையிடுவதற்கு கூடுதலாக 50 முதல் 60 கிராம் அடர் தீவனம் அளிக்கலாம். கால்சியம் சத்து குறைப்பாட்டினால் தோல் முட்டை விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு கோழிக்கு 4-5 கிராம் விகிதம், கிளிஞ்சல்களை இரவு ஊற வைத்து விட்டு அடுத்த நாள் காலையில் வேகவைத்து அளிக்கலாம் என்றார்.

புறக்கடை கோழி வளர்ப்பில் நோய் மேலாண்மை
சுமார் 50 நாட்களில் முதல் குடற்புழுநீக்க மருந்தினை கொடுக்க வேண்டும். அதற்கு முன்னே எச்சத்தில் குடற்புழுக்களை பார்க்கும் பட்சத்தில் அப்பொழுதே குடற்புழு நீக்க மருந்தை அளிக்கலாம். அதனைத் தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.

குறிப்பாக வெள்ளை கழிச்சல் மற்றும் அம்மை நோய் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

கோழிகளில் கழிச்சல் ஏற்படும் பட்சத்தில் வாழைத் தண்டை நன்றாக அரைத்து அதன் சாறை வெறும் வயிற்றில் கோழிகளுக்கு கொடுக்கும்போது கழிச்சலை கட்டுப்படுத்தலாம். குப்பை மேனி இலை, கீழாநெல்லி இலை, சீரகம் ஆகியவற்றை கோழிகளுக்கு தீவனம் மூலமாகவோ அரிசி குருணை உடன் கலந்து கொடுக்கும் பொழுது வெள்ளைக்கழிச்சல் நோய்க்குத் ஓரளவு தீர்வாக அமையும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories