புறக்கடை வளர்ப்பில் வருமானத்தை அள்ளித் தரும் ஒரு லாபகரமான தொழில் தான் கோழி வளர்ப்பு. குறைவாகவே வளர்ந்தாலும் நிறைவான வருமானம் இதில் கிடைக்கும்.
ஆனால் மழைக் காலத்தில் இவற்றை கவனமாக பராமரிக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன்பு அதற்கு பாதுகாப்பு முறைகளை கையாள்வது தான் புத்திசாலித்தனம்.
வெப்பம் மூ ட்டுதல்
இளம் குஞ்சுகளை அப்படியே தரையில் விடக்கூடாது. மரத்தூள் அல்லது தென்னை மஞ்சிகளை தரையில் பரப்பி பிறகு காகிதங்களை அதன் மேல் போட வேண்டும் .அதன் பிறகுதான் குஞ்சுகளை விட வேண்டும்.
பிறந்த இளம் குஞ்சுகளுக்கு வெப்பம் அளிப்பது முக்கியமானது. குறிப்பாக மழை மற்றும் குளிர் காலங்களில் தொடர்ச்சியாக அவற்றுக்கு வெப்பம் அளித்தால் மட்டுமே குஞ்சுகளை காப்பாற்ற முடியும். இவ்வாறு வெப்பம் அளிப்பதற்கு 25 அடி நீளம் ஒன்றரை அடி உயரத்தில் மரக்கட்டைகளை அமைத்து 100 வாட் பல்புகள் கட்டி தொங்கவிட வேண்டும்.
ஒரு குஞ்சுக்கு ஒரு வால்ட் என்ற கணக்கில் வெப்பம் அளிக்க வேண்டும். இரண்டு வார வயது வரை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.
இயற்கை வெப்பம் மூட்டுதல்
மழைக்காலத்தில் மின்சாரம் தான் பெரிய பிரச்சனையாக இருக்கும் மின்சாரம் தடைபட்டால் குஞ்சுகளுக்கு வெப்பம் அளி க்க முடியாது. அதற்கு பதிலாக நாம் இயற்கை முறையை தான் கையாள வேண்டும்.
பண்ணை உள்ள பகுதிகளில் மின்சாரம் அடிக்கடி தடைப்படும் என அஞ்சினால் அதற்கு பதிலாக கரி அடுப்புகளை செங்கல் கற்கள் மேல் வைத்து 100 குஞ்சுகளுக்கு இரண்டு முதல் மூன்று அடுப்புகள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்க வேண்டும்.
தண்ணீரில் கவனம்
40 குஞ்சுகளுக்கு ஒரு தண்ணீர் தொட்டி என்கிற கணக்கில் அரை இன்ச் உயரத்தில் தண்ணீர் தொட்டிகளை வைக்க வேண்டும்.
முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரில் சிறிது குளுக்கோஸ் கலந்து அளிக்கவேண்டும்.
முதல் 3 நாட்களுக்கு ஆன்ட்டிபயாட்டிக் பவுடர் மருந்தினை ஒரு லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து வைக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
அடிப்பகுதியில் போட்டுள்ள பேப்பர்களை காலை மற்றும் மாலை என இரு நேரமும் மாற்றியமைக்க வேண்டும்.
ஐந்து நாட்களுக்கு பிறகு காற்று மற்றும் வெளிச்சம் உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.
இரு வாரங்களுக்கு பிறகு இருக்கும் இடவசதியை அதிகரிக்க வேண்டும்.