மாதந்தோறும் லாபம் வழங்கும் கோழிப்பண்ணை! இப்போதே அமைக்க கடன் வழங்கும் வங்கிகள்! உடனே தொழில் தொடங்குங்கள்

குறைந்த முதலீட்டில் ஒரு தொழிலை தொடங்கி அதன் எதிர்கால திட்டமிடல் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த தொழில் வெற்றியடையும். ஆம், இதில் கோழி வளர்ப்பு தொழில் மிகச் சிறந்த தொழிலாக பார்க்கப்படுகிறது. கோழி இறைச்சி தேவையும், அதன் முட்டை தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோழி வளர்ப்பு அல்லது கோழிப் பண்ணைத் தொழில் முக்கிய தொழிலாக மாறி வருகிறது.

எந்தவொரு தொழிலுக்கும் முதலீடு என்பது அவசியமான ஒன்று. தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அரசு என்றும் கைவிட்டதில்லை. நல்ல பல திட்டங்களையும், மானியங்களையும் வழங்கி வருகிறது. குறைந்த முதலீட்டில் நீங்களும் கோழிப் பண்ணை அமைக்க விரும்பினால் நபார்டு வங்கி (NABARD BANK) 25% மானியம் வழங்குகிறது. அதுவே வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கும், எஸ்சி-எஸ்டி பிரிவினர்களுக்கு 33.33% வரை மானியம் வழங்கப்படுகிறது.

தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தல்
கோழி வளர்ப்பு அல்லது கோழிப் பண்ணை அமைக்க, முதலில் நீங்கள் ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இடம் கோழிகளை பாதிக்கும் வகையில் இருக்கக்க கூடாது. காற்று மாசுபாடு இல்லாத இடமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இது தவிர, தண்ணீர், சூரிய ஒளி மற்றும் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்திலிருந்து போக்குவரது வசதிகளும் இருக்க வேண்டும். இதற்கு பின்னர், நீங்கள் முதலீட்டிற்கான பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு எஸ்பிஐ (SBI), பிஎன்பி (PNB), எச்டிஎப்சி வங்கி (HDFC BANK), ஐடிபிஐ வங்கி (IDBI BANK) உள்ளிட்ட பல பொது மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்க காத்திருக்கின்றன.

எஸ்.பி.ஐ (SBI) வங்கியில் கடன் பெறுவது எளிது
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி, பிராய்லர் திட்டத்தின் கீழ் கோழிப் பண்ணை அமைக்க கடன் வழங்குகிறது. இதில், கோழிக்குஞ்சுகளை பராமரித்தல், தீவனம் வாங்குதல், கொட்டகை அமைத்தல் என அனைத்திற்கும் கடன் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நீங்கள் கோழிப் பண்ணை அமைக்கக்கூடிய நிலத்தை அடகு வைத்து வங்கிகள் உங்களுக்கு கடன்களை வழங்க முடியும். இந்த நிலத்தின் மதிப்பு குறைந்தது 50 சதவீத கடனுக்கு ஈடாக இருக்க வேண்டும்.

கடனை திருப்பிச் செலுவத்துவது எப்படி?
கோழிப் பண்ணைக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த எஸ்.பி.ஐ வங்கி ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கிறது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் முழு கடனையும் நீங்கள் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு கூடுதல் அவகாசமும் வழங்கப்படும். அதில் மீதமுள்ள தொகை ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் செலுத்தப்பட வேண்டும்.

வங்கிக் கடன் பெற தேவையான ஆவணங்கள்
எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்து கோழி கடன் பெற மூன்று முக்கிய ஆவணங்கள் தேவை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் .

அடையாளச் சான்றுக்காக : வாக்காளர் அடையாள அட்டை / பான் அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம்

முகவரிச் சான்றுக்காக : வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் போன்றவை தேவைப்படும் என்றார்.

75% வரை கடன் பெறலாம்
கோழிப்பண்ணையை பொறுத்தவரை, பயிற்சி அல்லது போதுமான அனுபவம் உள்ளவர்களுக்கு அல்லது கோழிப் பண்ணைக்கான கொட்டகை கட்ட போதுமான நிலம் உள்ளவர்களுக்கு வங்கி கடன் வழங்குகிறது. எஸ்.பி.ஐ தற்போது ஆண்டுக்கு 10.60 சதவீத விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. உங்களுடைய மொத்த முதலீட்டிலிருந்து 75 சதவீதம் வரை வங்கிகள் கடன் வழங்கும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories