பாரம்பரியத்தை விரும்புபவர்கள் நாட்டுக்கோழியின் ருசியை சிலாகித்து பேசுவர். இயற்கையாக கிடைக்கும் நாட்டுக்கோழிகள் என்றுமே அதிக சுவை கொண்டதுடன், உடலுக்கும் மிக ஏற்றது.எனவே,
இயற்கை உணவுகள்:
புறக்கடையில் நாட்டுக்கோழிகள் மேயும் போது பசும்புல் போன்ற தீவனத்துடன், மண்ணில் உள்ள கழிவுகளையும் (Wastages) கிளறி உண்கின்றன. இதனால் இவற்றின் இறைச்சி ருசியாகவும், மணமாகவும் இருக்கிறது. இயற்கையாகவே நாட்டுக் கோழிகளின் திசுக்கள் (Tissues) மிருதுவாக இருப்பதும் ஒரு காரணம். நாட்டுக் கோழிகளை வளர்ப்பதற்கு அரசு மானியம் வழங்குவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மானிய விலையில் நாட்டுக்கோழி குஞ்சுகளும் வழங்கப்படுகிறது என்றார்.
எளிய தொழில்:
கிராமப்புற பெண்களுக்கு எளிய வருமானம் (Simple income) தரும் தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளது. தேவைக்கேற்ப அவ்வப்போது கோழிகளை விற்று பணம் சம்பாதிக்கின்றனர். இவற்றுக்கு வெள்ளை கழிச்சல் நோய் (White diarrhea disease) மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்நோய் பாதிக்கப்பட்டால் பாதியளவு கோழிகள் இறந்துவிடும். நோய் வந்தபின் காப்பாற்றுவது கடினம் என்பதால், நோய் வரும் முன்பே இவற்றுக்கு தடுப்பூசி (Vaccine) போட்டு காப்பாற்ற வேண்டும். அரசு கால்நடையின் அனைத்து மையங்களிலும் சனிக்கிழமை தோறும் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி இலவசமாக (Free Vaccine) போடப்படுகிறது. குஞ்சுகளை வாங்கிய 30 முதல் 60 நாட்களுக்குள் இலவச தடுப்பூசி போட்டுக் கொண்டால் வருமான இழப்பிலிருந்து பாதுகாக்கலாம் என்று கூறினார்.