லாபத்தை அள்ளி வீசும் கறிக்கோழி பண்ணையம்…

கறிக்கோழி பண்ணையம் என்பது குடும்ப வருவாயைப் பெருக்க செய்யப்படும் ஒரு லாபகரமான தொழிலாகும். இந்தத் தொழில் 1968-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப் பட்டது.

உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1.9 பில்லியன்களுக்கு மேல் கறிக்கோழிகள் உற்பத்தியாகிறது.

கறிக்கோழி குஞ்சுகள் கொள்முதல்:

அதிக லாபம் பெற, நல்ல உடல்நலம் பெற்ற பெற்றோர் வம்சாவழி வந்த குஞ்சுகளை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து குஞ்சுகளும் ஒரே மாதிரியான உடல் அமைப்புடன் இருக்க வேண்டும். அவை சுறுசுறுப்பாகவும், எவ்வித உடல் குறைபாடுகள் இல்லாததாகவும் காணப்பட வேண்டும். முடிந்தவரை நம்பிக்கையான குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து குஞ்சுகள் பெறவேண்டும். ஏனெனில், அப்போதுதான் 4 முதல் 5 வாரத்திற்குள் 1.8 – 2 கிலோ தீவனத்தை உட்கொண்டு 1.5 கிலோ உடல் எடை அடைய முடியும்.

கொட்டகை மேலாண்மை:

கொட்டகைகளின் முக்கிய கடமை என்னவென்றால் அவை கோழிகளை மழை, குளிர், வெப்பம், கடும் காற்று, மோசமான வானிலை மற்றும் மற்ற பிராணிகளிடமிருந்து காப்பதே ஆகும். ஒரு கொட்டகையை கட்ட திட்டம் தீட்டும்போது, இடத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

கொட்டகை அமையவுள்ள இடம் நன்கு மேட்டுப் பாங்காக இருப்பது நல்லது. கொட்டகை கிழ-மேற்கு திசையில் கட்டவேண்டும். இரண்டு கொட்டகைக்கு இடையில் குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருப்பது நல்லது. பொதுவாக ஒரு கோழிக்கு 0.75 – 1.00 சதுர அடி இடம் தேவைப்படும். நல்ல காற்றோட்டத்திற்காக குறைந்தது இரண்டு ஜன்னல்களாவது கொட்டகையின் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்க வேண்டும்.

கூளம் மேலாண்மை:

கறிக்கோழி வளர்ப்பில் கூளம் எனப்படும் பொருள் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பெரும்பாலும் உபயோகப்படுத்தப் படும் கூளப் பொருட்கள் எது வென்றால், அரிசி, உமி, மரத்தூள், மரச்சீவல், கடலைப் பொட்டு, உலர்ந்த புல், கோதுமை வைக்கோல் போன்றவை களாகும். கூளம் நன்கு உலர்ந்ததாகவும் பூஞ்சை இல்லாமலும் இருக்க வேண்டும்.

கூளம் பராமரிப்பில் நமது முக்கிய கடமை என்னவென்றால், அதன் ஈரப்பதம் 20-30 விழுக்காடுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வதே ஆகும். ஈரப்பதம் அதிகமானால் அதுவே பல இன்னல்களுக்கு வழிவகுத்துவிடும். அவற்றில் ஒன்று ரத்தக்கழிச்சல் நோய் ஆகும். இதன் கிருமி ஈரப்பதம் அதிகமுள்ள கூளத்தில் வளரக்கூடும் தன்மை பெற்றதாகும்.

எனவே, எந்த நேரத்திலும் கூளத்தை உலர்ந்த நிலையிலேயே பராமரிக்க வேண்டும். பெரிய கட்டிகளாக காணப்படும் கூளம் இருப்பின், உடனடியாக அப்புறப்படுத்தி அதற்கு மாறாக புதிய உலர்ந்த, சுத்தமான கூளத்தைப் போடவேண்டும்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories