கீரை வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற காலம் எது?
கீரை வகைகளையும் மண்வளம் மற்றும் நீர் வசதியுள்ள இடங்களில் வருடம் முழுவதும் பயிரிடலாம்.
குளிர் பிரதேசத்தில் வாழும் செலரி வகைக் கீரையை நீர் போக ம் (பிப்ரவரி- ஏப்ரல்) கார் போகம் (ஏப்ரல் -ஜூன்)மற்றும் கடை போகம் (ஆகஸ்டு- அக்டோபர்) ஆகிய காலங்களில் பயிரிடலாம்.
மழைக்காலங்களில் வாழைகளை நோயிலிருந்து எப்படி பாதுகாப்பது?
மழை பெய்வதற்கு முன்பு தண்ணீர் தேங்காத வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். களை கள் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட இடைவெளியில் வாழைக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் .பாதிக்கப்பட்ட அல்லது காய்ந்த இலைகளை தோட்டத்தில் இருந்து நீக்கி தீ வைத்து எரிக்க வேண்டும்.
நெல் பயிர் சாகுபடி உயிர் உரங்கள் பங்கு என்ன?
ஊட்டச்சத்து மேலாண்மை ரசாயன உரங்களின் செலவினங்களை குறைத்து அதற்கு இணையான சத்துக்களைக் வழங்குவதில் பெரிதும் பங்காற்றுவது உயிர் உரங்கள் ஆகும்.
நெல்வயல்களில் தழை மற்றும் சாம்பல் சத்தினை நிலைநிறுத்துவது அசோஸ்பைரில்லம் அசட்டோபாக்டர் பாஸ்போ பாக்டீரியா மற்றும் அசோலா பெரும் பங்கு வகிக்கிறது.
வான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்?
வான்கோழிகள் பொதுவாக பச்சை கீரைகளை விரும்பி உண்ணும் .அதனால் தீவனத்தில் நறுக்கிய பச்சை கீரைகளை சேர்த்து கொடுக்கலாம்.
வேலி மசால், குதிரை மசால் போன்றவற்றை பயிரிட்டு இளம் தளிராக கொடுக்கலாம்.
இதனால் தீவன செலவு வெகுவாக குறையும்.
செம்மறி ஆடுகளுக்கு நீலநாக்கு நோய் எப்படி வருகிறது?
செம்மறி ஆடுகளை தாக்கும் நோய்களிலில் நீலநாக்கு நோய் முக்கியமானதாகும். மழைக்காலங்களில் கூலிக்காயிஸ்ட் என்ற ஒரு வகை கொசுக்கள் இந்த நோயை பரப்புகின்றன.