குதிரைவாலி பயிர் பாதுகாப்பு

வயலில் விதைத்த 25 முதல் 30 நாட்கள் வரை கலைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒருமுறை களை எடுத்தால் போதுமானது.

பூஞ்சான காளான் நோய்
பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி எறிவது மூலம் கட்டுப்படுத்தலாம். விதைகள் ஆரோக்கியமான செடிகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

கரிப்பூட்டை நோய்
இதனை கட்டுப்படுத்த ஆக்ரோஷம் 2.5 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் விதைநேர்த்தி செய்யவேண்டும். சுடுதண்ணீரில் நனைத்து விதைக்கலாம்.

தூரு மாய்
டைட்தேன் M-45 2 கிலோவை ஆயிரம் லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

தண்டு துளைப்பான்
தேமேட் குருணை மருந்தை ஒரு எக்டருக்கு 15 கிலோ என்ற விகிதத்தில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை
குதிரைவாலி 75 நாளிலிருந்து கதிரை எடுக்கத் தொடங்கிய 90-ம் நாளில் முற்றிவிடும் சரியான மழை கிடைக்காவிட்டால் முற்றுவதற்கு முன் 100 நாட்கள் வரை கூட ஆகலாம். அறுவடையின்போது குதிரைவாலியின் தாள்களை விட்டு விட்டு கதிர் மட்டும் அறுவடை செய்ய வைக்கவேண்டும். பிறகு கம்பு மூலம் அடித்தோ அல்லது மா ட்டை விட்டு மிதிக்க வைத்தது கதிரில் இருந்து மணியை பிரிக்க வேண்டும்.
குதிரை வாலி கால்நடைகளுக்குத் தீவனமாக கொடுக்கலாம். ஆனால் அறுவடையின் போது கவனமாக கதிர்களை மட்டும் அறுவடை செய்வது நல்லது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories