மிளகு நாற்றங்கால் தயாரிப்பு

நல்ல நிழலுடன் தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் ஒரு மீட்டர் அகலம் மற்றும் 5.6 மீட்டர் நீளமும் கொண்ட உயர பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி பிறகு ஒரு பத்து பன்னெண்டு கிலோ தொழுவுரம் 5 கிலோ மண்புழு உரம் 250 கிராம் உயிர் உரங்கள் 5 கிலோ மணல் மற்றும் 5 கிலோ செம்மண் கலந்தபாத்திகளை சீராக வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான தாய்க் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஓடு கொடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் .தேர்ந்தெடுக்கப்பட்ட துண்டுகளின் அருகில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளின் மண்ணில் வேர் விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டி வைக்க வேண்டும். பிப்ரவரி மார்ச் மாதத்தில் 2 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய ஓடு கொடிகளைத் கொடியில் இருந்து வெட்டி நீக்க வேண்டும். பிறகு ஒரு கொடியின் மேற்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும் கீழ் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியில் தவிர்த்துவிட்டு நடுப்பகுதியில் தண்டு துண்டுகள் தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் .இளம் ஓடு கொடிகளையும் முதிர்ந்த ஓடு கொடிகளின் தவிர்க்க வேண்டும்.

பிறகு ஒரு கொடியில் இருந்து இரண்டு முதல் மூன்று கணக்கில்கொண்டு துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும். இத்தகைய தண்டுத் துண்டுகளை நடுப்பகுதியை பஞ்சகவியா 3 சதம் கரைசலில் 30 நிமிடங்கள் வைத்து பிறகு பார்த்து அல்லது பாலிதீன் பைகளில் நடவேண்டும் .பாலிதீன் பைகளில் ஒரு பாகம் வளமான மேல்மண் ஒரு பாகம் ஆற்றுமணல் ஒரு பாகம் தொழுஉரம் மற்றும் ஒரு பாகம் மண்புழு உரம் கலந்த கலவையை நிரப்ப வேண்டும். இதில் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றங்கால் பாத்திகளில் 250 கிராம் அசோஸ்பைரில்லம் 250 கிராம் பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை நன்கு கலக்கவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories