பருவம்
பங்குனி தை ஆணி ஆவணி மாதங்களில் அகத்தி விதைக்க வேண்டும். வெற்றிலை கொடி பங்குனி சித்திரை ஆவணி புரட்டாசி மாதங்களில் நடவு செய்யலாம்.
மண்
நல்ல வடிகால் வசதி கொண்ட கரிசல் மண் சாகுபடிக்கு ஏற்றது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும். பிறகு ஒரு மீட்டர் அகலம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும். நீளம் வ யலின் அமைப்புக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். பாத்திகளின் உயரம் 0.5 மீட்டர் இருக்க வேண்டும்.
விதை அளவு
இடைவெளியைப் பொறுத்து பயிர்களின் எண்ணிக்கை மாறுபடும். தாய் கொடியிலிருந்து முதல் 3 அடி வரை நறுக்கி அதனை மூன்று துண்டுகளாக்கிய நடவு செய்ய வேண்டும். விதை கொடிகளிலும் நான்கு முதல் ஐந்து கனுகள் இருக்க வேண்டும்.
விதை நேர்த்தி
விதை கொடிகளையும் நடுவதற்கு முன்பு ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்ட சாணம் குழம்பில் அடி பகுதிகளையும் 10 நிமிடம் ஊற வைத்து நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் வேர்கள் துரிதமாக வளர்ச்சி அடையும்.
விதைத்து
மேட்டுப் பாத்திகளில் ரட்டை வரிசைகளாக அகத்தி விதையை 30 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும் .அகத்தின் நடவு செய்தபிறகு ஆறு நாட்கள் கழித்து வெற்றிலைக் கொடி களை 45 சென்டிமீட்டர் இடைவெளியில் இரண்டு வரிசைகளில் நடவு செய்யலாம். தேவைப்பட்டால் ஓரங்களில் வாழை கட்டைகளை நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம்
கொடிகளை நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.