அவரக்காய் எப்பொழுதும் பயிரிடலாம்?

செடி அவரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். செடி அவரை விதைத்து இரண்டு மாதத்தில் காய் பறிக்கலாம்.

கொடி அவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யலாம் நிறைய காய் கொடுக்கும் நீண்டகாலத்துக்கு அறுவடை எடுக்கலாம்.

எளிமையான இயற்கை வளர்ச்சி ஊக்கியை எப்படி தயாரிக்கலாம்?

எளிமையான இயற்கை வளர்ச்சி ஊக்கி தயாரிக்க இரண்டு லிட்டர் தயிர் 3 லிட்டர் தண்ணீர் கலந்து தயார் செய்து வெண்ணெய் நீக்கிய பிறகு பிளாஸ்டிக் டிரம்மில் அல்லது பானையில் ஊற்றி நிழலான இடத்தில் மூடி வைக்க வேண்டும்.

ஏழு நாட்களுக்குப் பிறகு 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி புளித்த மோர் கரைசல் வீதம் கலந்து தெளிக்க பயன்படுத்தலாம்.

தென்னையில் கூன் வ ண்டு தாக்கத்தின் அறிகுறிகள்?

தென்னையில் சிவப்பு கூண் வண்டு தாக்கத்தினால் தண்டில் துளைகள் காணப்படும் மற்றும் காப்பி நிற கோந்து வடியும் இதனால் இலைகள் மஞ்சள் நிறமடைந்து நாளடைவில் மத்திய குருத்து வாடல் ஏற்படும்.

மேலும் துளை பகுதியிலிருந்தும் மென்ற நார் பகுதிகள் வெளியே வரும் தென்னை ஓலையின் அடிப்பகுதியில் பிளவு ஏற்படும்.

நெற்பயிரில் வெண்கதிர் நோயை எப்படி தடுக்கலாம்?

வெள்ளைநிற கூ ண்டுபுழு நெற்பயிர் தண்டு உள்ளே ஏற்படும் சேதத்தினால் வெண்கதிர் நோய் உண்டாகிறது.

வேப்பங்கொட்டைச் சாற்றைக் தெளிக்கவேண்டும் நாற்றுகளை நெருக்கமாகும் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும் தொடர்ச்சியாக வயலில் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் பாதிக்கப்பட்ட கதிர்களை பிடுங்கி அகற்றிட வேண்டும் விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

கோழிகளினால் பண்ணைகளில் கழிவுகள் சேதம் அடைவதை எப்படி தடுக்கலாம்?

பண்ணை கழிவு சேகரிக்கும் இடத்தில் அரை அடி ஆழத்திற்கு தேங்காய் மட்டைகளை அதன் மேல் காய்ந்த இலைச் சருகுகளைஅ டிக்கி தண்ணீர் தெளித்து அதற்கு மேல் பாதி அளவு மக்கிய பண்ணைக் கழிவுகளை நிரப்பிய பிறகு அதைச்சுற்றி வலைகளை அமைப்பதனால் கோழிகளிடமிருந்து கழிவுகள் சேதப்படுவதை தவிர்க்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories