அஸ்வகந்தா மிகவும் குறுகிய காலத்தில் வளரும் மருந்துச் செடி ஆகும். வறண்டநிலங்களில் நன்றாக வளரும். அஸ்வகந்தா வேர் அதிக மருத்துவ குணம் உள்ளது.
தாவரவியல் இயல்புகள்
அஸ்வகந்தா சொலனேசி குடும்ப வகையைச் சேர்ந்தது. இலையுதிர தாவரம். 13 முதல் 15 சென்டிமீட்டர் உயரம் வளரும் தன்மை உடையது.
செடியின் அமைப்பு
செடியின் தண்டு பகுதி அதிக ரோமங்கள் மற்றும் அதிக கிளைகள் உடையதாக இருக்கும். இலைகளில் வட்ட வடிவிலும் இலையின் நுனி கூர்மையாகவும் மலர்கள் இ ருமையை தன்மை கொண்டதாகவும் இலையின் அடிப்பகுதியில் இருந்து தோன்றும்.
மலர்கள் லேசான மஞ்சள் நிறத்திலும் காய்கள் சிறிய உருண்டை வடிவில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
ரகங்கள்
ஜவகர் அசந்த –
அடர்ந்த பச்சை இலைகள் இளம் வெளிரிய மலர்கள் காய்கள் முதிர்ந்த உடன் மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.
(ws= 22) ஜம்முவில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.
வளரும் மண்
அஸ்வகந்தா அதிகமாக கரிசல் அல்லது சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரும் மேலும் நன்கு வடிகால் வசதி கொண்ட மண்ணில் சாகுபடி செய்ய ஏற்றதாக இருக்கும்.
விதைப்பு நேரம்
ஜூலை மாதத்தின் இறுதியில் விதைப்பு செய்ய வேண்டும்.
பூச்சி மற்றும் நோய் தாக்குதல்
பூச்சித்தாக்குதல் குறைவாக தான் இருக்கும்.
ஆனால் நாற்று அழுகல், இலை அழுகல் போன்ற நோய்கள் தாக்கலாம்.
அறுவடை
நடவு செய்து 150 முதல் 170 நாட்களில் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை பயிர்களை அறுவடை செய்யவேண்டும். மண்ணிலிருந்து இதன் தண்டுப் பகுதியை நீக்கிவிட்டு வேறு பகுதிகளையே தோண்டி எடுத்து உலர்த்த வேண்டும்.