இஞ்சி சாகுபடி முறைகள்!

 

விவசாய விளைபொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு சில சிறப்புகளை கொண்டிருக்கும். அப்படிப்பட்ட விலை பொருட்களில் ஒன்று தான் இஞ்சி. இந்த இஞ்சியை சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி இங்கு காணலாம்.

இந்தியாவில் மேற்கு கடலோரப் பகுதிகளில் இஞ்சி மே மாதங்களிலும் வடகிழக்கு மாநிலங்களில் ஏப்ரல் மாதங்களில் இறவைப் பயிராக சாகுபடி செய்யும்போது பிப்ரவரி மாத இடையில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பயிரிடலாம்.

இஞ்சி பயிர் சாகுபடி செய்ய பிப்ரவரி-மார்ச் மாதம் கோடை கால மழை கிடைத்தவுடன் நிலத்தையே 4 முதல் 5 முறை நன்றாக உழுது தயார் செய்ய வேண்டும் .நிலத்தை நன்றாக கொத்தி பதமாக வேண்டும். அதற்குப் பிறகு தொழு உரம் மற்றும் மண்புழு உரம் போன்றவை நிலத்தில் போட்டு நிலத்தை நன்கு தயார் செய்ய வேண்டும். அதன் பிறகு 15 சென்டிமீட்டர் உயரம் ஒரு மீட்டர் அகலம் மற்றும் தேவையான நீளம் வைத்து பேத்திகளுக்கு இடையே 40 முதல் 50 சென்டிமீட்டர் இடைவெளியில் பார் அல்லது மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும்.

இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக்கி வெட்டி இனப்பெருக்கம் செய்து அதன் பிறகு நடவு செய்யலாம். ஒரு எக்டருக்கு 1500 முதல் 1800 கிலோ விதை இஞ்சி கரணைகள் தேவைப்படும்.

இஞ்சியை எப்படி நடவு செய்வது?

கோடை மழை கிடைத்த உடனேயே இஞ்சி நடவு செய்யவேண்டும். 20 முதல் 25 கிராம் எடை மற்றும் 2.5 முதல் ஐந்து சென்டி மீட்டர் நீளமுள்ள கரணை துண்டுகளை எடுத்துக் கொள்ளலாம். பாத்திகளில் 50 சென்டிமீட்டர் x 5o சென்டிமீட்டர் அல்லது 25 சென்டி மீட்டர் x 25 சென்டி மீட்டர் இடைவெளியில் அமைத்து சிறு குழியில் நடுதல் வேண்டும். கரணைகளை நடவு செய்யும்போது அந்த கரணைகளை ஜீவாமிர்தக் அரசியலில் நனைத்து நடவு செய்ய வேண்டும். ஜீவாமிர்தக் கரைசல் வேர் அழுகல் நோயை தடுக்கும்.

ஒரு எக்டருக்கு தொழு உரம் 25 முதல் 30 டன் மற்றும் தழை மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 75 முதல் 50 மற்றும் 25 கிலோ இட வேண்டும். முழு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை அடியுரமாக இடலாம். தழைச்சத்தை கரணைகளை விதைத்த 45வது நாளிலும் மறுபாதியை சாம்பல்சத்தும் சேர்த்து 90 வது நாளில் மேலுரமாக இடவேண்டும்.

பூச்சி தாக்குதலுக்கு என்ன செய்யலாம்?

பூச்சி தாக்கத்தை அகற்ற இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலையும் செடிகளின் இலைகள் பழுப்பு நிறம் மாறுவதை தடுக்கவும் கற்பூர கரைசலையும் செடிகளின் வளர்ச்சிக்கு பஞ்சகாவியா கரைசலையும் தெளித்து விடலாம்.

இஞ்சி ,காய்கறிக்காக பயன்படுத்துவதாக இருந்தால் ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம். சுக்கு (உலர்ந்த இஞ்சி( தயாரிக்க 245 முதல் 260 நாட்களில் (இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் போது( அறுவடை செய்யலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories