இதோ கொத்தமல்லியை இப்படியும் சாகுபடி செய்யலாம்….

கொத்தமல்லி சாகுபடி:

இரகங்கள்:

கோ 1, கோ 2, கோ 3, கோ (சி.ஆர்) 4, ஜி ஏ யூ 1, யூ டி 1, யூ டி 2, யூ டி 20 மற்றும் யூ டி 21.

மண் மற்றும் தட்பவெப்பநிலை:

நல்ல வடிகால் வசதி உள்ள இரு மண்பாட்டு நிலம் பயிரிட மிகவும் ஏற்றது. மண்ணின் அமில காரத் தன்மை 6-8 வரை இருக்கவேண்டும். மானாவாரியாகப் பயிரிட ஈரமான கரிசல் மண் ஏற்றது, வெப்பநிலை சராசரியாக 20-25 செல்சியஸ் இருந்தால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

காலநிலை:

குளிர் மற்றும் உலர்ந்த, பனி இல்லாத பகுதி கொத்தமல்லி சாகுபடிக்கு ஏற்றது.

பருவம்:

ஜூன் – ஜூலை மற்றும் அக்டோபர் – நவம்பர்.

விதையளவு:

10-12 கிலோ / எக்டர் (இறவைக்கு) 20-25 கிலோ / எக்டர் (மானாவாரிக்கு) கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து விதைக்கவேண்டும். உடைக்காமல் முழு விதைகளை நடவு செய்தால் விதை முளைக்காது.

விதை நேர்த்தி:

விதைகளை நீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக பயிர் உருவாவதற்காக விதைகளை ஹெக்டருக்கு 1.5 கிலோ அசோஸ்பைரில்லத்துடனும், வாடல் நோயினை கட்டுப்படுத்த எக்டருக்கு 50 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

மானாவாரி பயிர்களின் விதைப்பிற்கு முன்பு ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் பொட்டாசியம் டைஹெட்ரஜன் பாஸ்பேட் கொண்டு 16 மணி நேரம் விதையைக் கடினமாக்குதல் அவசியமாகும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிராக இரந்தால் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும்.

விதை விதைப்பான் மூலம் 20 x 15 செ.மீ இடைவெளியில் விதைக்கவேண்டும். விதைகள் 8-15 நாட்களுக்குள் முளைத்துவிடும். மானாவாரி சாகுபடியில் விதைகளைத் தூவும் முறையில் விதைத்து விட்டு நாட்டுக் கலப்பைக் கொண்டு மூடிவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:

அடியுரம்:

எக்டருக்கு 10 கிலோ தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். விதைப்பதற்கு முன் இறவை மற்றம் மானாவாரிப் பயிர்களுக்கு 10 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.

மேலுரம்:

இறவைப் பயிருக்கு மட்டும் விதைத்த 30வது நாள் எக்டருக்கு 10 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அளிக்கவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி:

களைகள் முளைக்கும் முன்னர் புளுக்குளோரலின் எக்டருக்கு 700 மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து பயிர் களைதல் வேண்டும்.

தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும். மானாவாரிப் பயிருக்கு விதைத்த 30 நாட்கள் கழித்து 250 பிபிஎம் சிசிசி என்ற பயிர் ஊக்கி தெளித்தால் பயிர் வறட்சியைத் தாங்கி வளரும்.

அறுவடை:

விதைத்த 30வது நாளில் செடிகளைக் கலைத்து விடுவதன் மூலம் கீரைகளாக அறுவடை செய்யலாம்.

சாதாரணமாக விதைத்த 90 முதல் 110 நாட்களில் விதைகளை அறுவடை செய்யலாம்.

காய்கள் நன்கு பழுத்தவுடன், காயின் நிறம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறும் போது அறுவடை செய்வது நல்லது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories