உருளைக்கிழங்கு எப்படி நடவு செய்ய வேண்டும்?

 

நோய் தாக்காத நிலங்களிலிருந்து தேர்வு செய்த விதை கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி 10 முதல் 15 செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 85 முதல் 90 சதவீத ஈரப்பதம் உள்ளவாறு 4 முதல் 6 நாட்கள் வரை வைக்க வேண்டும்.

இவ்வாறு வைப்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் கிழங்கில் நுழைவதைத் தடுக்கலாம் .நடவு செய்வதற்கு முன்பு இந்த விதைகளை பஞ்ச காவியத்தில் ஒரு மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு இவற்றை நடவு செய்ய வேண்டும்.

பரங்கிக்காய் விதைகளை எப்படி நடவு செய்ய வேண்டும்?

பரங்கிக்காய் ஆனது எல்லா வகையான நிலத்திலும் வளரக்கூடியது ஆகும். முதலில் வீட்டின் பின்புறத்தில் அரையடி குழி வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு மக்கிய தொழு உரத்தை 10 கிலோ போட்டு குழியை நன்கு ஆற விட வேண்டும் .இதை நேர்த்தி செய்த விதைகளை நடவு செய்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

தானியங்களின் முளைப்புத்திறன் பாதிக்கப்பட பூச்சிகள் எப்படி காரணமாகும்?

தானியம் மற்றும் விதைகளை தாக்கும் பூச்சிகள் முதலில் உள் பகுதியை குடைந்து சத்துபகுதி முழுவதையும் உண்டு விடும். பிறகு வெற்று ஓட்டையை மட்டும் விட்டுச் செல்கின்றன.

இந்த வகை தானியங்களால் அதன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க முடியாது. இதனால் இவற்றின் முளைக்கும் திறன் பாதிக்கப்படும்.

இயற்கை விவசாயம் என்பது எதை சார்ந்தது?

ரசாயன மற்ற எளிதாக கிடைக்கக்கூடிய இடு பொருட்களான ஆட்டு எரு ,மாட்டு எரு, மற்றும் பஞ்சகாவியம், அமிர்தகரைசல், மூலிகை பூச்சிவிரட்டி மற்றும் மீன் அமிலங்கள் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் பூச்சிவிரட்டிகளையே ஆரம்பம் முதல் முடிவு வரை பயன் படுத்துவதையே நோக்கமாகக் கொண்டது தான் இயற்கை விவசாயம்.

மாடுகளுக்கு காலில் உள்ள காணை புண்ணுக்கு என்ன வைத்தியம் செய்யலாம்?

நிலக்கடம்பு இலை( தரை புகையிலை) 250 கிராம், மஞ்சள் 50 கிராம்,கட்டி கற்பூரம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்து காணை உள்ள கால்களில் வைத்து ஒரு துணியால் கட்டிவிடவேண்டும். கொசு மற்றும் ஈ மொய்க்காமல் இருக்க அதற்கு மேல் வேப்ப எண்ணையை தடவி விட வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories