ரகங்கள்
ஜோதி, முத்து, சொர்ணா,தங்கம், மலர் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
மலைப் பகுதிகளுக்கு மார்ச்-ஏப்ரல் ஆகஸ்ட் செப்டம்பர் ஜனவரி பிப்ரவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. சமவெளிப் பகுதிகளுக்கு அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவமாகும்.
மண்
கெட்டியாக இல்லாமல் நன்கு நீர் வடிய கூடிய செம்மண் நிலங்கள் ஏற்றவை மண்ணின் கார அமிலத்தன்மை 4.8 முதல் 5.4 ஆக இருக்கவேண்டும். இது ஒரு குளிர்கால பயிராகும். பொதுவாக உருளைக்கிழங்கு மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.வருடத்திற்கு 1200 முதல் 2000 மிமீ மழை பொழியும் பகுதிகளில் சாகுபடி செய்யலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்றாக கொத்தி பண்படுத்தி 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார் பிடிக்க வேண்டும். மலைப்பகுதிகளில் 1.4 மீட்டர் அளவில் உள்நோக்கி சாய்ந்தவாறு சாய்வு தளம் அமைக்க வேண்டும். வடிகாலுக்கு வாய்க்கால் அமைக்க வேண்டும்.
விதை அளவு
ஒரு ஏக்கருக்கு3ooo3500 கிலோ விதைகிழங்குகள் தேவைப்படும்..
விதைத்தல்
உருளைக் கிழங்கு சாகுபடியில் விதை தயாரிப்பு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.புதிய கிழங்குகளின் முளைப்புத்திறன் சீராக இருக்காது. ஆகவே முளைப்புத் தன்மைஏற்படுத்த கார்பன் டை சல்ஃபைடு என்னும்மருந்து 100 கிலோ விலங்குகளுக்கு கிழங்கு 30 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். கிழங்குகளை குவியல் ஆக்கி குவியலின் மேல் ஒரு அகன்ற தட்டில் மருந்தை ஊற்றி பாலித்தீன் தாள் மூடிவிடவேண்டும். கிழங்கு முளைப்பு வந்தவுடன் நடவுக்கு பயன்படுத்த வேண்டும். நிலத்நிலத்தின் சாயத்தை சாய் தளத்தை பொறுத்து செடிக்குச் செடி 15 முதல் 20 சென்டிமீட்டர் இடைவெளியில் முளை வந்த கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.