உளுந்துசாகுபடி

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழவு செய்து சமன் படுத்தவேண்டும் .நிலம் மேம்பாட்டுக்கு ஒரு எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் ஆகியவற்றை அடி உரமாக இட வேண்டும்.

விதை அளவு
ஒரு எக்டருக்கு 20 கிலோ விதை போதுமானது.

விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் அல்லது கார்பன்டாசிம் அல்லது திராம் இரண்டு கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.

விதைத்தல்
விதைகளை30×10 சென்டி மீட்டர் இடைவெளியில் மானாவாரியாக விதைக்க வேண்டும். அதன் பிறகு தேவைக்கு ஏற்ப பார்கள் அமைத்து கொள்ள வேண்டும். வரப்பு ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் பிறகு உயிர்த்தண்ணீர் மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories