ஊசிமல்லி பயிரிடுவது எப்படி

 

ரகங்கள்

ஏற்காடு மலை ,பச்சை மலை, ஆற்காடு முல்லை ,பச்சை முல்லை, குட்டைகூர்முனை ,குட்டை வட்டமுனை, என உள்ளூர் வகைகள்பல உள்ளன. இதைத் தவிர பாரிமுனை கோ-1 கோ-2 ரகங்களும் உள்ளன.

பருவம்

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நடவுக்கு ஏற்ற மாதங்களாகும்.

மணல்

செம்மண், களிமண், கரிசல் ஆகியவை ஊசி மல்லி சாகுபடிக்கு ஏற்றவை.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது 30 சென்டிமீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை தயார்செய்ய வேண்டும். பிறகு குழிக்கு 10 கிலோ தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து ஆற விட வேண்டும்.

விதை அளவு

ஒரு எக்டரில் பயிரிட ஆயிரம் செடிகளும் அடர் நடவு முறையில் பயிரிடுவதற்கு 4000 செடிகளும் தேவைப்படும்.

விதை விதை நேர்த்தி
பத்து லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து 8 மாத வயது கொண்ட முல்லை பதியன் களையும் அந்த கரைசலில் நனைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்று நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஏழாம் நாளில் புதூர் துளிர் வர ஆரம்பிக்கும் .பிறகு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories