எலுமிச்சையில் அதிக மகசூல் எப்படி பெறலாம்?

எலுமிச்சை மரம் ஒன்றுக்கு ஒரு வாளித் பன்றி எரு இட்டால் பூ உதிர்தல் தடுக்கப்படும் மகசூல் அதிகரிக்கும்.

வேப்பங்கொட்டை கரைசல் அல்லது வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளித்தால் இலை உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலையும் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க செய்யலாம்.

திராட்சையில் நல்ல மகசூல் கிடைக்க என்ன உரம் இடலாம்?

சணப்பை மற்ற பசுந்தாள் உரங்களை விட சற்று அதிக சத்துக்களையும் எளிதில் மட்கும் தன்மையும் கொண்டுள்ளது.

திராட்சை தோட்டத்தை உழவு செய்வது கடினம்.ஆகவே செடியினை சுற்றி கிண்ணம் முறையில் பள்ளம் எடுத்து பசுந்தாள் உரம் இடலாம்.

செடி நட்டதிலிருந்து கொடி பந்தலில் படரும் வரை இரண்டு முதல் மூன்று முறை சணப்பை விதைத்து 45 நாட்களில் பிடிங்கி கொடியைச் சுற்றி அரை அடி ஆழத்தில் மண் கொண்டு மூடி விடுவதால் நல்ல மகசூல் பெறலாம்.

தரமான விதை என்றால் என்ன?

தரமான விதை என்பது அதன் பாரம்பரிய குணங்களில் இருந்து சிறிதும் குறையாமல் இருப்பதே ஆகும். மேலும் கலை பிற ரக மற்றும் பிற பயிர் விதை கலப்பினம் இல்லாமலும் பூச்சி பூசண தாக்குதல் இல்லாமலும் இதர தூசு குப்பை இல்லாமல் இருப்பது ஆகும்.

வாழையில் எப்படி நோய் உண்டாவதை தடுக்கலாம்?

வாழையில் காய்ந்த இலை மற்றும் நோய் தாக்கிய இலைகளை அவ்வப்போது அகற்றி எரிப்பதால் வயலை நோக்கி பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

காய்களின் நுனியில் ஒட்டியிருக்கும் பூவின் எஞ்சிய பாகத்தை நீக்குவதால் குலை வெட்டிய பின்பும் இலையின் வெடுப்பாகத்தில் களிமண் கொண்டு பூசுவதால் நோய் பரவுதலை தடுக்க முடியும்.

கோடையில் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய வேண்டும்?

ஆப்ரிக்கன் நெட்டை மக்காச்சோளம் முப்பது கிலோவுடன் கோ 5 காராமணி 10 கிலோ கலந்து விதைத்து 55 முதல் 60 நாட்களில் அறுவடை செய்தால் அருமையான பசுந்தீவனம் கிடைக்கும்.

இந்த தீவனத்தில் நார்சத்து புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கோடையில் தீவனம் கிடைக்காத பட்சத்தில் தீவனம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்கின்றது.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories