எலுமிச்சையில் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தரையிலிருந்து 45 சென்டிமீட்டர் உயரம் வரை உள்ள பக்க கிளைகளை வெட்டி விட வேண்டும்.
மேலும் பருவமழைக்கு பிறகு கோடை உழவு மேற்கொண்டு களைகளை அழிக்க வேண்டும்.
கரும்பைத் தாக்கும் பூச்சிகள் என்னென்ன?
முக்கிய பணப் பயிரான கரும்பு பூச்சிகளின் தாக்குதல் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
அதில் இளங்குருத்து புழு , இடை கண்ணுபுழு மிக முக்கியமான சேதத்தையும் நுனி குருத்துப்புழு, வேர்ப்புழு, கரையான் ஆகியவை சில பகுதிகளிலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் செதில் பூச்சி, வெள்ளை மாவுச் பூச்சி சேதத்தை ஏற்படுத்துகின்றன.
அசோலாவில் தழைச்சத்தை எப்படி சேகரமாகிறது?
நீரில் மிதக்கும் ஒரு செல் தாவர வகையைச் சார்ந்தது.
அனோபீனா அசோலா என்ற ஒரு வகை பாசி இந்த தாவரத்தின் அடிப்பாகத்தில் தொற்றிக் கொண்டு வாழும்.இவை காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து அசோலா தாவரத்தை சேர்த்துவைக்கும்.
வேஸ்ட் டி கம்போஸ்ட் எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஒரு டே ங்கிற்கு 10 லிட்டர் 6 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் டீ கம்போஸ் கரைசல் சேர்த்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை பயிர்களின் மீது தெளிக்கலாம்.
ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலை பாசன நீர் வழியாக கொடுக்கலாம்.
கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் பசுந்தீவனங்கள் யாவை?
கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கோ-1 ,கோ-2, கோ-3 போன்ற பசுந்தீவனங்களை கொடுக்கலாம்.
பயறு தீவனப்பயிர்கள் குதிரை மசால் ,வேலி மசால் ,காராமணி, அவரை, கொத்தவரை, நரிப்பயறு ,சணப்பு ,கொள்ளு ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும்.