எள்ளுக்கு 7 உழவு

ஒரு கிராமத்தில் ஆசிரியர் ஒரு நாள் பள்ளியில் மாணவர்களை பார்த்து நாளைக்கு ஒவ்வொருவரும் அவரவர் அப்பா என்ன விவசாயம் செய்து உள்ளார் அதை எப்படி பயிர் செய்வார் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு வரவேண்டும். நாளைக்கு ஒவ்வொருவராக எழுந்து முன்னாடி வந்து சொல்லவேண்டும் என சொல்லியிருந்தார்.

அதில் ஒரு மாணவன் ரஞ்சித் .அவன் ஆசிரியர் சொன்னதை தன் தந்தையிடம் கூறினான். அவன் தந்தையும் நமது தோட்டத்தில் எள் சாகுபடி செய்ய உள்ளோம் அதைப்பற்றியே சொல்லித் தருகிறேன் நீ தெரிந்து கொள் என்று கூறினார்.

எள்ளு ஒரு 90 நாள்பயிர். அதை மானாவாரி நிலம் இரவை நிலம் ஆகிய இரண்டு நிலத்திலும் பயிர் செய்யலாம்.

மானாவாரி என்றால் ஆடி கார்த்திகை மாதங்களிலும் இறவை என்றால் மாசி மாதத்திலும் பயிர் செய்யலாம் என்றார்.

அப்பொழுது எள்ளை எப்படி விதைக்க வேண்டும் என்று கேட்க அவனது தந்தை எள்ளை நேரடியாக விதிக்கக்கூடாது.

எள்ளை விதைக்கும் முன்பு நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். அதுவும் ” எள்ளுக்கு ஏழு உழவு” என்று சொன்னார்.

ரஞ்சித் அதென்ன “எள்ளுக்கு ஏழு உழவு ” ஏழு உழுவு கலப்பை எப்படி இருக்கும் எனக்கு புரியவில்லை என்றார்.

அதற்கு அவருடைய தந்தை கலப்பை எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும். நாம் உழ வு செய்யும் முறை தான் முறைதான் வேறுபடும்.

சரி அப்பா அதை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டான்.

அதற்கு அவனுடைய தந்தை சோளம் ,கரும்பு, நெல்லு என ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரி உழவு செய்யப்படுகிறது.

அந்த வகையில் மிகவும் சிறிய விதை என்பதால் தான் கடினத்தன்மை இல்லாதவாறு மிருதுவாக இருக்க வேண்டும். அதற்கு தான் உழவு செய்யும்போது ஒவ்வொரு சுற்றுக்கும் குறைந்தது ஏழு முறைஉழுவதால் மண் கட்டிகள் முற்றிலும் உடைக்கப்பட்டு நிலத்தில் மண் நன்கு பொலபொலவென இருக்க வேண்டும்.

அதனால தான் “எள்ளுக்கு ஏழு உழவு ” செய்யவேண்டும் அவ்வாறு உழும்போது எள்ளின் விளைச்சல் அதிகமாக கிடைக்கும் என்றார்.

நானும் எல் சாகுபடியில் உள்ள சிறப்பினை எனது ஆசிரியர் மற்றும் நண்பர்களிடம் சொல்கிறேன் என்றான்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories