என்னை வித்து பயிரான எள் என்னை அளவு குறையாமலும் தரும் கெடாமலும் பாதுகாத்திட வேண்டும், அதனால் அறுவடைக்குப் பிறகு நேர்த்தி செய்யும் முறைகளைப் பற்றி இங்கு காணலாம்.
அறுவடை அறிகுறிகள்
எள்ளுச் செடியின் கீழ் பகுதியில் உள்ள 25% இலைகள் உதிர்ந்துவிடும். மேலே உள்ள இலைகள் மற்றும் தண்டு பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறி இருந்தால் அறுவடை தொடங்கி விடலாம்.
எள் காய்கள் பாதி அளவு மஞ்சள் நிறம் அடைந்து விட்டால் பயிர் அறுவடை செய்ய ஏற்ற பருவமாகும். வெள்ளை எள் விதைவெள்ளை நிறம் அடைய வேண்டும் .
எள்ளு பயிரின் கீழ் பகுதியில் இருந்து பத்தாவது காயை உடைத்துப் பார்த்தால் உள்ளே இருக்கும் விதைகள் கருப்பு நிறமாக மாறி இருந்தால் அறுவடை செய்து விடலாம் .இது கருப்பு எள்ளு விதைக்க மட்டும் பொருந்தும்.
மேலே கூறிய நிலையைத் தாண்டி அறுவடை செய்தால் காய்கள் வெடித்து விதைகள் சிதறி சேதமடையும் தரைமட்டத்திலிருந்து வெட்டிஎடுக்க வேண்டும்.
அடுக்கியசெடியில் உள்ள காய்கள் ஒட்டுமொத்தமாக முதிர்ச்சி அடைவதற்கு முன்பு அந்தபகுதியில் வைக்கோல் வைத்து விட்டு மூடி வைக்க வேண்டும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு எள் எடுத்து களத்தில் காய வைக்கவேண்டும் .மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை காய வைத்து பிறகு விதைகளை தனித்தனியே பிரித்து எடுக்க வேண்டும்.